சினிமா
பிக்பாஸ் 9 வீட்டில் கடுமையான சண்டை!! கதறி அழுத சண்ட்ரா..
பிக்பாஸ் 9 வீட்டில் கடுமையான சண்டை!! கதறி அழுத சண்ட்ரா..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 9வது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த நிகழ்ச்சியில் முதல் 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் 8, 9வது சீசன்கள் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் ஆரம்பமானது, நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து போட்டியாளர்களுக்குள் ஒரே சண்டை தான். தற்போது ஆட்டம் நன்றாக சூடு பிடிக்க வைல்ட் கார்டு என்ட்ரியாக 4 நபர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.இந்நிலையில், 30-வது நாளான இன்று பிரவீன், கம்ரூதின், பிரஜின் மூன்று பேருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இதனால், கடும் வேதனையில் சாண்ட்ரா அழுதுள்ளார்.ஆனால் மூவரும் பிராங்க் செய்தோம் என்று கூறி அதிர்ச்சி கொடுத்தனர். பிராங்க என்றாலும், பல மணி நேரம் அவரால் இந்த சம்பவத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் போக, சக போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.
