சினிமா
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு.. மண்டியிட்டு பண்ணிப்பு கேட்ட நபர்
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு.. மண்டியிட்டு பண்ணிப்பு கேட்ட நபர்
வைல்டு கார்டு போட்டியாளர்களின் என்ட்ரிக்கு பின் பிக் பாஸ் 9 சூடு பிடிக்க துவங்கியுள்ளது. தமிழில் குறைவான ரேட்டிங் இருந்தாலும், தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பவன் மற்றும் ரித்து சவுத்ரி ஆகிய போட்டியாளர்கள் நடுவில் லவ் ட்ராக் சென்று கொண்டிருந்தது.இந்த நிலையில் திடீரென இருவரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, பவன் திடீரென பெண் போட்டியாளரை தள்ளிவிட்டுவிட்டார். அந்த வாக்குவாதம் பற்றி வார இறுதியில் நாகார்ஜுனா பேசினார். இது மிகப்பெரிய தவறு என கருதி, உடனடியாக பவன் ரெட் கார்டு கொடுத்து வெளியில் வரும் படி சொன்னார்.ஆனால் அந்த நேரத்தில் ரித்து சவுத்ரி குறுக்கிட்டு தன் மீதும் தவறு இருப்பதாக கூறினார். அதன்பின் நாகார்ஜுனா ஒருவழியாக மனம் மாறி பவன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். அதன்படி, பவன் அதை செய்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ..
