டி.வி
பிரவீன், பிரஜினை அடிக்க பாய்ந்த கம்ரூதின்.! கதறிய சாண்ட்ரா.. கலவர பூமியான பிக் பாஸ்
பிரவீன், பிரஜினை அடிக்க பாய்ந்த கம்ரூதின்.! கதறிய சாண்ட்ரா.. கலவர பூமியான பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் 30-வது நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிரவீன் கம்ரூதினுக்கு இடையே சண்டை இடம்பெற்றுள்ளது. இதனால் பிக் பாஸ் வீடு ஆட்டம் கண்டுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் 20 போட்டியாளர்களுடன் பங்கேற்ற இந்த சீசன், அதிலிருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அரோரா, ஆதிரை இறுதியாக கலையரசனும் வெளியேறியிருந்தனர். இவர்களின் இடத்தை ஈடு செய்யும் வகையில் நான்கு வைல்ட் கார்ட் என்ட்ரி பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். இவர்கள் உள்ளே நுழையும் போது தங்களுடைய கருத்துக்களை அதிரடியாக தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். ஆனால் தற்போது போன வேகத்திலேயே அடங்கி காணப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பிரவீனை பார்த்து என்ன..? என்ன..? என்று கேட்டுக்கொண்ட கம்ரூதின் சண்டைக்கு போகின்றார். இதனால் அவர்கள் இருவரையும் பிரஜின் வந்து தடுக்கின்றார். இதனால் சண்டை தொடரவே பிரவீனை தள்ளிவிட்டு கம்ருதீன் பிரஜினுடன் சண்டைக்கு போகின்றார். இதனால் பயப்பட்ட சாண்ட்ரா பயந்து அழுகின்றார். மேலும் இப்படி பண்ணாதே என்று பிரஜினை பார்த்து கதறி அழுகின்றார். அவருக்கு சக ஹவுஸ்மேச்சும் ஆறுதல் சொல்லுகின்றனர். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் சண்டை போடுவதற்கு பிரஜினும் கம்ரூதினும் பிளான் போட்டு உள்ளார்கள். தற்போது பிக் பாஸில் கம்ரூதின் பார்வதியின் விஷயம்தான் சூடாக காணப்படுவதனால் அதை வைத்து சண்டை போடுவதற்கு திட்டமிட்டனர். அதன்படியே இந்த சண்டை ஒரு பிராங்காக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
