இலங்கை
ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகர் அதிரடி கைது
ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகர் அதிரடி கைது
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் , ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் மூலம் ரூ. 90 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 50 தற்காலிக கிடங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
