இலங்கை
வட்ஸ்அப் ஊடாக பணம் கோரும் மோசடி!
வட்ஸ்அப் ஊடாக பணம் கோரும் மோசடி!
வட்ஸ்அப் ஊடாக பணம் கோருவது தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துவருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுபோன்ற முறைப்பாடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் டபிள்யூ. ஜி. ஜெயனெத்சிறி தெரிவித்தார்.
வட்ஸ்அப் குழுக்களைப் பயன்படுத்தும் போது இந்த மோசடிகள் குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
