சினிமா
42 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. யார் அந்த நடிகர் தெரியுமா
42 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே.. யார் அந்த நடிகர் தெரியுமா
முன்னணி நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் காஞ்சனா 4 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், பூஜா ஹெக்டேவின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இட்லி கடை எனும் ஹிட் படத்தை கொடுத்த நடிகர் தனுஷுடன் தான் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கவுள்ளார்.இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படம் D55. இப்படத்தின் பூஜை கடந்த சில மாதங்களுக்கு முன் போடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் தனுஷ் – பூஜா ஹெக்டே இணையும் முதல் படம் இதுவே ஆகும்.
