சினிமா
அடுத்தடுத்து அம்பலமாகும் சீக்ரெட்ஸ்.? ரோகிணிக்கு எமனான முத்து.! டுடே ரிவ்யூ
அடுத்தடுத்து அம்பலமாகும் சீக்ரெட்ஸ்.? ரோகிணிக்கு எமனான முத்து.! டுடே ரிவ்யூ
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து கார் செட்டில் இருக்கும் போது அங்கு வந்த முருகன், தன்னுடைய உறவினர்கள் சென்னைக்கு வந்ததாகவும், அவர்களுக்கு குழந்தை இல்லை அதற்காக ட்ரீட்மென்ட் பாக்க வந்ததாகவும், சவாரியின் போது அவர்களை கூட இருந்து கவனிக்குமாறும் சொல்லுகின்றார். முத்துவுக்கு பழக்கமான தாத்தா, பாட்டியின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அவருடைய உறவினர் சேகர் போன் பண்ணுகின்றார். மேலும் உங்களையும் மீனாவையும் பாட்டி கேட்டுக் கொண்டிருக்கின்றார், யாராவது ஒருவர் வந்து பார்த்தால் அவர்களுக்கு உடல்நிலை தேறும் என்று சொல்லுகின்றார். இதனால் முத்து மீனாவை அனுப்பி வைக்கின்றார். அதன் பின்பு ரோகினி அவருடைய அம்மாவை சந்திக்க செல்கிறார். அங்கு அவருடைய அம்மா ரோகிணியின் முதல் கணவரின் உறவினர்கள் போன் பண்ணியதாகவும், அவர்கள் உனக்கு செய்த பாவத்தால் இப்போது வரை குழந்தை இல்லாமல் இருக்கின்றார்கள் என்று அழுது புலம்பியதாகவும், உன்னையும் க்ரிஷ்யையும் பார்க்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியதாகவும் கூறுகின்றார். மேலும் அவர்களிடம் உன்னுடைய நம்பரை கொடுத்ததாகவும் சொல்ல, ரோகினி அவருடைய அம்மாவை கண்டபடி திட்டுகின்றார். மேலும் அந்த நேரத்தில் அவர்கள் போன் பண்ணி ரோகிணியிடம் பேச, ரோகிணி அவர்கள் திட்டி தீர்க்கின்றார். இதை தொடர்ந்து முருகன் வித்யாவுடன் முத்துவை கூட்டிக்கொண்டு அவர்களின் உறவினர் வீட்டுக்குச் செல்ல, அங்கு கணவன் மனைவியாக இருந்தவர்கள் தங்களுக்கு குழந்தை இல்லை என்ற விடயத்தை சொல்லி மன வருத்தப்படுகின்றனர். மேலும் வித்யாவிடம் சீக்கிரமாகவே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு சொன்னதோடு நாங்கள் செய்த பாவம்தான் எங்களுக்கு 15 வருஷமா குழந்தை இல்லை என்று சொல்கின்றனர். வித்யா என்ன நடந்தது என்று கேட்கவும், என்னுடைய அண்ணன் பொண்டாட்டி மூன்று மாதமாக இருக்கும்போது அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டோம். என்னுடைய அண்ணன் இறந்ததற்கு பிறகு நாங்கள் இப்படி பண்ணி இருக்கக் கூடாது. அந்த பாவம்தான் என்று ரோகிணியின் புகைப்படத்தையும் காட்டுகின்றார். இதனால் வித்யா அதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றார். இறுதியாக வித்யா நடந்தவற்றையெல்லாம் ரோகிணியை நேரில் சந்தித்து சொல்லுகின்றார். மேலும் நீ முத்துவிடம் சிக்கப் போகின்றாய் என்று பயமுறுத்துகின்றார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ரோகிணி குழம்பிப் போய் உள்ளார். இதுதான் இன்றைய எபிசோட்.
