இந்தியா
கேரளாவின் வறுமை ஒழிப்புத் திட்டம்: இலக்கு தவறியதா? உண்மை நிலை என்ன? ஒரு அலசல்
கேரளாவின் வறுமை ஒழிப்புத் திட்டம்: இலக்கு தவறியதா? உண்மை நிலை என்ன? ஒரு அலசல்
கேரளாவில் உள்ள தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் (EPEP) பல குழப்பங்களால் நிரம்பியுள்ளது. தனிநபர்கள், குடும்பங்கள் (families), இல்லங்கள் (households) ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடுகளை கேரளா அரசு புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது. இந்தத் திட்டத்தால் கவனிக்கப்பட்ட 64,006 குடும்பங்கள் உள்ளனர், ஆனால் அவர்களனைவரும் சேர்த்தால் 1,03,099 தனிநபர்கள் மட்டுமே உள்ளனர். இது சராசரியாக ஒரு குடும்பத்திற்கு இரண்டுக்கும் குறைவான நபர்கள் என்பதைக் காட்டுகிறது, இது உயிரியல் ரீதியாக சாத்தியமற்றது. அவர்கள் 64,006 இல்லங்கள் (households) என்பதையே குறிப்பிட்டிருக்க வேண்டும். இவ்வாறாக 14,862 ஒற்றை உறுப்பினர் கொண்ட இல்லங்கள், ஒற்றை உறுப்பினர் குடும்பங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு தனி நபரை எப்படி ஒரு குடும்பமாகக் கருத முடியும்?இந்த பிழை தவறாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையோடு நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் இத்திட்டத்துடன் தொடர்புடையவர்களே, இந்த இல்லங்களுக்கு வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பு குடும்ப அளவை (standard census family size) பயன்படுத்துவதன் மூலம் பிழை மேலும் சிக்கலாக்குகின்றனர். உதாரணமாக, இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த கல்வியாளரான டாக்டர் ஜாய் எலமன், அரசின் பத்திரிக்கையான ‘கேரளா காலிங்’-ல் எழுதிய கட்டுரையில், 64,006 இல்லங்களை “தீவிர ஏழைகள்” என அடையாளம் கண்டிருப்பது, கேரள மக்கள்தொகையில் 0.73% பேர் தீவிர ஏழைகள் என்ற நிதி ஆயோக்கின் கண்டுபிடிப்புடன் ஒத்துப்போகிறது என்று எழுதுகிறார். ஒரு இல்லத்திற்கு 5 பேர் என்ற அளவைப் பயன்படுத்தினால் மட்டுமே இது சாத்தியமாகும். 3.6 கோடி மக்கள்தொகையில் 1 லட்சம் தனிநபர்கள் என்பது உண்மையில் 0.28% குறிக்கிறது. டாக்டர் எலமனின் அளவுகோலின்படி பார்த்தால் கூட, இந்தத் திட்டம் கேரளாவின் “தீவிர ஏழைகளில்” பாதிக்கும் குறைவானவர்களையே சென்றடைந்துள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கமேலும், இந்தத் திட்டம் அனைத்து “தீவிர ஏழைகளையும்” சென்றடைய முற்படவில்லை. மாறாக, இது “தீவிர ஏழைகள்” என்பதற்கு ஒரு புதிய வரையறையை முன்மொழிந்தது, அது மற்ற திட்டங்களின் கீழ் ஏற்கனவே வராத பயனாளிகளைக் குறிவைத்தது. சுருக்கமாகச் சொன்னால், நலத்திட்ட வலையமைப்பிற்கு வெளியே விடப்பட்டவர்களையும் அதில் இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது; எனவே, கேரளாவில் உள்ள 5.9 லட்சம் அந்த்யோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைதாரர்கள் (“ஏழைகளிலும் ஏழைகள்”), மற்றும் அவர்களைப் போன்ற பிற குழுக்கள் இத்திட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கப்பட்டனர். எனவே, சில ஆர்வலர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் (suggest) போல, இந்தத் திட்டத்திற்கான இலக்கு மக்களை “ஆதரவற்றோர்” (destitutes) என்று குறிப்பிடுவதே மிகவும் துல்லியமானது, மேலும் இந்தத் திட்டம் ‘ஆதரவற்றோருக்கான மறுவாழ்வுத் திட்டம்’ (Rehabilitation Project for Destitutes) என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.கம்யூனிசத்தில் ஒரு உள்ளார்ந்த கருணை (homegrown Caritas) உள்ளது, மேலும் தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் இந்த கம்யூனிச நெறிமுறையின் ஒரு பகுதியாகும். இதை வெறும் தேர்தல் உத்தியாகப் புறக்கணித்துவிடக் கூடாது. நிச்சயமாக, கம்யூனிஸ்டுகள் தாங்கள் விரும்பும் நிபந்தனைகளின் பேரில் தேர்தலில் வெற்றி பெறுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் வருந்தத்தக்கது என்னவென்றால், தேர்தல்கள் ஆதரவற்றோரின் பிரச்னைகளால் தீர்மானிக்கப்படுவதில்லை.கேரள அமைச்சர்கள் விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் கூறுவதுபோல, சீனாவிற்கு பின், தீவிர வறுமையிலிருந்து விடுபட்ட 2வது பிராந்தியமாக கேரளாவை மாற்றுவதை இந்த அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சீனாவின் சாதனைகளைப் பின்பற்றுவது அவர்களின் உலகில் (lifeworld) ஒரு இலட்சியமாகும். இது “கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள்” என்பதைப் பற்றியது, அதனால் அவர்கள் இந்த விஷயத்தை மிகவும் உயர்வாகக் கருதுகிறார்கள் மற்றும் நியாயமான விமர்சனங்களுக்கு செவிசாய்க்காதவர்களாக (impervious to legitimate criticism) ஆகிவிடுகிறார்கள், எந்தவொரு விமர்சகர்களையும் வெறும் கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரகர்கள் என்று நிராகரிக்கின்றனர். இருப்பினும், ஆதரவற்ற நிலைக்கு எதிரான போரை (battle against destitution), தீவிர வறுமை ஒழிப்பு (eradication of extreme poverty) என்று முன்னிறுத்தும் இந்த மோசடியை (hoax) சுட்டிக்காட்டப்பட வேண்டும்.கேரளாவில் தொடர்ச்சியாக அமைந்த 2 LDF (இடதுசாரி ஜனநாயக முன்னணி) அரசாங்கங்கள், ஏழைகளுக்கு உதவுவதற்கான தங்கள் முயற்சிகளில், குறிப்பாக வீடற்றவர்களுக்கு கண்ணியமான வீடுகளைக் கட்டித் தருவதற்கான அவர்களின் மகத்தான முயற்சியில் பெருமை கொள்ளலாம். எந்தவொரு ஜனநாயக சமூகத்திலும், இந்த படிப்படியான முன்னேற்றம் (incremental progress) ஒரு திருப்திகரமான விளைவாகும். தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயல்படுத்துவது, 2021-ல் 2-வது பினராயி விஜயன் அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க முடிவாகும். இத்திட்டம், சிவில் சமூகத்திற்கும் அரசாங்கத்தின் பல்வேறு மட்டங்களுக்கும் இடையிலான பரந்த மற்றும் சுமூகமான ஒருங்கிணைப்பின் விளைவாகும், இது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை நீடித்த முயற்சியின் மூலம் மேம்படுத்தியுள்ளது.நாடோடிகள் (vagrants), ஆதரவற்றவர்கள் (hapless), நோயாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மிகவும் நலிவடைந்த ஏழைகளின் பிற குழுக்கள் (இவர்களை ஜிக்முன்ட் பாமன் “வீணடிக்கப்பட்ட உயிர்கள்” (Wasted Lives) என்று அழைக்கிறார்) போன்றோரிடம் கடைப்பிடிக்கப்படும் நடவடிக்கைகளில் மனிதநேய உணர்வைக் கொண்டு வந்தது என்பதே இத்தகைய திட்டத்தின் உண்மையான மதிப்பு. முதலாளித்துவத்திற்கு எதிரான கதைகளில், ஹென்றி VIII நாடோடிகளைத் தூக்கிலிட உத்தரவிட்ட கதை அடிக்கடி கூறப்படுகிறது, இது 72,000 தொழிலாளர் வர்க்கத்தினர் (lumpenproletarians) தூக்கிலிடப்படுவதற்கு வழிவகுத்தது. பெரும்பாலான நவீன நாடுகளில் கூட, இந்த வீணடிக்கப்பட்ட உயிர்கள் வெறுமனே புறக்கணிக்கப்படுகின்றன. இதற்கு மாறாக, கேரளா அரசாங்கம் ஒரு லட்சம் “வீணடிக்கப்பட்ட உயிர்களின்” வாழ்க்கை எல்லையற்ற அளவுக்கு மேம்படுத்தியுள்ளது. அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப, அல்லது குறைந்தபட்சம் தங்கள் வாழ்க்கையை ஓரளவு கண்ணியத்துடன் வாழ அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியதே இதன் சாதனை. இருப்பினும், நவம்பர் 2025 தேதியிட்ட அதன் சொந்த EPEP நிலை அறிக்கையின்படி, 231 நாடோடிகள் இருந்தனர், அவர்களை அரசாங்கமே கைவிட வேண்டியிருந்தது. அவர்கள் சமகால ‘Vogelfrei’ (சட்டத்திற்குப் புறம்பானவர்கள்) போன்று, அரசிற்கும் சமூகத்திற்கும் அப்பாற்பட்ட விளிம்புகளில் கேரளாவில் சுற்றித் திரிகின்றனர்.
