பொழுதுபோக்கு
கோடிக்கணக்கில் அபேஸ்… பிலிம் சிட்டி உரிமையாளருக்கு விபூதி அடித்த இன்ஸ்டா பிரபலம்; போலீசில் பரபர புகார்
கோடிக்கணக்கில் அபேஸ்… பிலிம் சிட்டி உரிமையாளருக்கு விபூதி அடித்த இன்ஸ்டா பிரபலம்; போலீசில் பரபர புகார்
சென்னை பூந்தமல்லி ஈ.வி.பி பிலிம்சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி, இன்ஸ்டா பிரபலம் பார்வதி தன்னிடம் கோடி கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்தோஷ் ரெட்டி தனக்கு காதல் தொல்லை கொடுத்ததாக பார்வதி பெங்களூர் போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செம்பரம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில படப்பிடிப்புகள் நடைபெற்றது. தற்போதும் நடைபெற்ற வருகிறது. அதேபோல் டிவி ரியாலிட்டி ஷோவுக்கான செட் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்ற வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் -வது சீசனுக்காக செட் கூட இங்கு தான் அமைக்கப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஈவிபி பிலிம் சிட்டியின உரிமையாளர் தான் சந்தோஷ் ரெட்டி. இவர் மீது இன்ஸ்டா பிரபலமும் ஆடை வடிவடைப்பாளருமான பார்வதி சமீபத்தில் பெங்களூரு வயாலி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ஈவிபி பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி என்னை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்தார். காதலிக்க மறுத்ததால் என்னையும், என்னுடைய பிள்ளைகளையும் கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்தார்’ என்று கூறியிருந்தார். இது குறித்து பெங்களூரு வயாலி காவல்துறையினர் சந்தோஷ் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பார்வதி புகார் அளிக்கும் முன்பே அவர் மீது, பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை காவல்நிலையம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவில் சந்தோஷ் ரெட்டி மோசடி புகார் அளித்துள்ள ஆதாரத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் குறித்து நேரில் ஆஜரான சந்தோஷ் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஒரு நிகழ்ச்சியில் தான் பார்வதி தன்னை என்னிடம் அறிமுகம் செய்துகொண்டு தான் இன்ஸ்டா பிரபலம் என்றும், ஆடை வடிவமைப்பாளர் என்றும் கூறி என்னிடம் நட்பாக பழகி வந்தார். நாளடைவில் என்னுடைய வீட்டு சுபநிகழ்ச்சிக்காக ஆடை, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை விலை குறைவாகவும், புது புது டிசைனாகவும் வாங்கியும், வடிவமைத்தும் தருவதாக கூறினார்.அதற்கு சென்னையை விட பெங்களூருவில் தரமான நகைகளும், பிராண்டட் பொருட்களும் இருப்பதாக கூறினார். அவரை நம்பி பார்வதியின் கணவர் பார்த்திபன் நடத்தி வரும் பிரைம் எண்டர்பிரைசஸ் என்கிற கம்பெனி அக்கவுண்டில் 3 கோடியே 6 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தபோத, வரி பிரச்சனை வந்துவிடும் என அந்த பணத்தை திருப்பி என்னுடைய அக்கவுண்டிற்கு அனுப்பினர். அதன்பிறகு பொருட்களை வாங்க நீங்களே பெங்களூருவுக்கு வந்து விடுங்கள் என்று சொன்னார். அதன்படி கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி நான் பெங்களூரு சென்றேன். ஹோட்டலில் தங்க இருந்த என்னை வலுக்கட்டாயமாக பார்வதியின் வீட்டில் தங்க வைத்தனர்.அடுத்த நாள் நான், பார்வதி மற்றும் அவரது கணவர் பார்த்திபன் ஆகியோர் பெங்களூருவில் உள்ள பிரபல நகை கடை மற்றும பல இடங்களில் பொருட்கள் வாங்கினோம். ஒவ்வொரு பொருட்களை வாங்கும் போதும் பார்வதி சொன்ன அக்கவுண்டிற்கு பணத்தை அனுப்பி வைத்தேன். ரூ.1.37 கோடிக்கு மேல் பொருட்கள் வாங்கப்பட்டது. இதில் ஒரு சில பொருட்கள் மட்டுமே கையில் கொடுக்கப்பட்டது. மற்ற பொருட்கள் ஆர்டரின் பெயரில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சொல்லி என்னை அனுப்பி வைத்தனர். 20 நாட்கள் கழித்து பொருட்கள் வரவில்லையே என்று கேட்க பார்வதியை நான் தொடர்பு கொண்டபோது அவர் காசு யாரிடம் கொடுத்தீர்களோ அவரிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட்டார். இதனால் நான் கடந்த செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நசரத்பேட்டை காவல் நிலையம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவு ஆகிய இடங்களில் பார்வதி மீது புகார் அளித்தேன். இந்த புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி, அவரது நண்பர் நித்திஷ் ஆகிய இருவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பார்வதி கடந்த 14/7/2025 அன்று நான் மிரட்டியதாக பெங்களூரு காவல் நிலையத்தில் மீது பொய் புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்கு பிறகு தான் பார்வதி தரப்பினருக்கு கொடுத்துள்ளேன். அதற்கான ஆதாரங்கள் உள்ளது. தொழில் அதிபர்களை குறி வைத்து பார்வதி தொடர்ந்து இதுபோல் மோசடியில் ஈடுபட்டு வருகிறார். அவர் மீது பல மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்று கூறியுள்ளார்.
