இலங்கை
நடிகர் சரத்குமார் இலங்கைக்கு வருகை!
நடிகர் சரத்குமார் இலங்கைக்கு வருகை!
தென்னிந்திய திரைப்படத்துறையின் பிரபல நடிகர் சரத்குமார், இன்று 05ஆம் திகதி முற்பகல் 11.05 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அவர் 04 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரத்குமார் நாளை கண்டி, தெல்தெனிய, உடிஸ்பத்துவ பகுதியில் உள்ள 7 நட்சத்திர விருந்தகம் ஒன்றுக்கு செல்லவுள்ளார். அத்துடன், கொழும்பு, காலி போன்ற பகுதிகளுக்கும் அவர் பயணம் செய்யவுள்ளார்.
