Connect with us

இலங்கை

பணமோசடி; அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்கள் முடக்கம்

Published

on

Loading

பணமோசடி; அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்கள் முடக்கம்

  பணமோசடி வழக்கில் இந்திய தொழிலதிபர் அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. இவருக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, ‘யெஸ்’ வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது.

Advertisement

ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

இவரது வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அவருக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது.

Advertisement

அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். அதேவேளை, அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்குமுன் கைது செய்தனர்.

இந்நிலையில், பணமோசடி வழக்கில் அனில் அம்பானியின் 3 ஆயிர்ம கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

முடக்கப்பட்ட சொத்துக்களில் மும்பையில் உள்ள 66 ஆண்டுகல் பழமையான அம்பானியின் வீடு , அவரது குழும நிறுவனங்களுக்கு சொந்தமான பிற குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்களும் அடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன