Connect with us

இலங்கை

யாழில் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு!

Published

on

Loading

யாழில் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு!

சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருவதனால் இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில் யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை பிரதானமாகக் கொண்டு நாட்டின் பிற மாவட்டங்களையும் உள்ளடக்கி தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வானது இந்திய பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஒருபகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பருத்தித்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவான J/401 இல்  நாளைய தினம்  05.11.2025 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று நடைபெறவுள்ளது.  இது ஒரு ஒத்திகைச் செயற்பாடு என்பதனால் இது தொடர்பில் பொதுமக்கள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

Advertisement

 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன