Connect with us

இந்தியா

‘10% பேர் கட்டுப்பாட்டில் முக்கிய நிறுவனங்கள்’… பீகார் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு

Published

on

rahul

Loading

‘10% பேர் கட்டுப்பாட்டில் முக்கிய நிறுவனங்கள்’… பீகார் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் குற்றச்சாட்டு

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல்கட்ட பிரச்சாரம் முடிவடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். அப்போது, தனியார் நிறுவனங்கள், நீதித்துறை, அதிகார வர்க்கம் மற்றும் ஆயுதப் படைகளில் ஒடுக்கப்பட்ட சாதிகள், பழங்குடியின சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மிகக் குறைந்த பிரதிநிதித்துவமே உள்ளதாகவும், மக்கள்தொகையில் 10% பேர் மட்டுமே இந்த நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.குடும்பா (Kutumba) சட்டமன்றத் தொகுதியில் நடந்த பேரணியில் ராகுல்காந்தி பேசினார். இங்கு பீகார் காங்கிரஸ் தலைவரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ் குமார், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) கூட்டணிக் கட்சியான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா வேட்பாளர் லலன் ராமை எதிர்கொள்கிறார். மேலும், அவுரங்காபாத் மற்றும் வசீர்கஞ்ச் ஆகிய இடங்களிலும் ராகுல்காந்தி செவ்வாய்க்கிழமை பேரணிகளில் உரையாற்றினார். பீகார் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (நவ.6) நடைபெறுகிறது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்ககுடும்பா பேரணியில் பேசிய ராகுல், “நாட்டின் மக்கள்தொகையை நீங்க பார்த்தால், 90% மக்கள் தலித், மகாதலித், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் அல்லது சிறுபான்மையினராக இருப்பதைக் காண்பீர்கள். ஆனால் அம்பானி, அதானிக்குச் சொந்தமான நிறுவனங்களை பார்த்தால், 500 பெரிய நிறுவனங்களின் பட்டியலை எடுத்தால், இந்த சமூகங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை நீங்க காண வேண்டும். ஆனால் ஒருவரைக் கூட நீங்க காண முடியாது. அனைவரும் 10% மக்கள்தொகையைச் சேர்ந்தவர்கள். அனைத்து வங்கிப் பணமும் அவர்களுக்கே செல்கிறது, அவர்கள் அதிகார வர்க்கத்தில் இடம்பிடிக்கிறார்கள். நீதித்துறையிலும் நீங்க இதைக் காணலாம். ராணுவத்திலும் அவர்களுக்குக் கட்டுப்பாடு உள்ளது. 90% மக்களை நீங்க எங்கும் காண முடியாது.””எங்களுக்கு இத்தகைய இந்தியா வேண்டாம். 90% மக்களுக்கு இடம் இருக்கும், சகோதரத்துவம் நிலவும் இந்தியாவே எங்களுக்கு வேண்டும்,” என்று அவர் கூறினார். பிரதமர் மோடியையும் ராகுல் காந்தி விமர்சித்தார், “அவருக்கு போலிப் பட்டம் இருப்பதால் கல்வி மீது அலட்சியமாக இருக்கிறார்” என்று கூறினார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “மக்களை இந்தியா முழுவதும் தொழிலாளர்களாக மாறும்படி கட்டாயப்படுத்தி உள்ளார்” என்றும் காங்கிரஸ் எம்.பி. குற்றம் சாட்டினார்.மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி அரசு அமைந்த நாளில், உலகின் சிறந்த பல்கலைக் கழகம் நாளந்தாவில் அமையும் என்று அவர் கூறினார். “ஒரு காலத்தில் உலகின் சிறந்த பல்கலைக் கழகம் பீகாரில் உள்ள நாளந்தாவில் இருந்தது. இங்கு படிக்க மக்கள் வரிசையில் நின்றனர். சீனா, ஜப்பான், கொரியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாளந்தாவில் படிக்க வரிசையில் நிற்பார்கள். ஆனால் மோடிஜிக்கு இதெல்லாம் தெரியாது,” என்றார்.அவுரங்காபாத்தில், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளிலிருந்து இளைஞர்களை திசை திருப்புவதற்காக, மோடி சமூக ஊடக “போதைக்கு” அவர்களை ஆளாக்குவதாக காந்தி குற்றம் சாட்டினார். “நீங்க ரீல்ஸ், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் அடிமையாக வேண்டும் என்று மோடி விரும்புகிறார்… இது 21-ம் நூற்றாண்டின் புதிய ‘போதை’. இது இளைஞர்கள் திசைதிருப்பப்படுவதை உறுதி செய்யும், மேலும் அவர்கள் அவரது அரசாங்கத்தை பொறுப்பேற்கச் செய்ய மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.”சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது என்பதை அறிந்ததால்,” மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பீகாரில் “வாக்குத் திருட்டு” (vote chori) செய்வதாக காந்தி மீண்டும் குற்றம் சாட்டினார். “பீகாரில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அது மிகவும் பிற்படுத்தப்பட்ட, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் அரசாக இருக்கும்,” என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.விவசாயிகளுக்கு தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிஇதனிடையே, ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவரும், பீகாரின் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் (MSP) கூடுதலாக 1 குவிண்டால் நெல்லுக்கு ரூ.300ம், கோதுமைக்கு ரூ.400ம் போனஸாக வழங்கப்படும் என்று செவ்வாய்க்கிழமை உறுதியளித்தார்.பாட்னாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான அவர், அனைத்து தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் (PACS), தொடக்க சந்தைப்படுத்தல் கூட்டுறவுச் சங்கங்கள் (வியாபார மண்டலங்கள்) ஆகியவற்றின் தலைவர்களுக்கு “மக்கள் பிரதிநிதிகள்” அந்தஸ்து வழங்கப்படும் என்றார். மாநிலத்தில் 8,400க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள் (PACS) உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபைக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6 ஆம் தேதி நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்புகள் வந்துள்ளன. 2-ம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. முடிவுகள் நவம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்படும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன