இலங்கை
200 நோய்களுக்குக் காரணமாக அமையும் புகையிலை!
200 நோய்களுக்குக் காரணமாக அமையும் புகையிலை!
புகையிலை மற்றும் மதுபான பயன்பாடு சுமார் 200 நோய்களுக்குக் காரணமாக அமைகிறது என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.
புகையிலை மற்றும் மதுபான பயன்பாட்டைக் குறைப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புகையிலை மற்றும் மதுபான பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு 110 பேர் உயிரிழப்பதாகவும், அதனை கட்டுப்படுத்த சுமார் 204 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் கையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
