பொழுதுபோக்கு
OTT: உருகி உருகி காதல்… கலங்கடிக்கும் கிளைமாக்ஸ்; காதல் ஜோடிகளை இளக வைக்கும் டாப் படங்கள் லிஸ்ட்!
OTT: உருகி உருகி காதல்… கலங்கடிக்கும் கிளைமாக்ஸ்; காதல் ஜோடிகளை இளக வைக்கும் டாப் படங்கள் லிஸ்ட்!
இந்த வீக் எண்டில் ஓ.டி.டி தளங்களில் ஸ்ட்ரீமாகி வரும் காதல் ஜோடிகளை இளக வைக்கும் டாப் காதல் திரைப்படங்கள் குறித்த பட்டியலை பார்ப்போம்.சீதா ராமம்காதல் ஜோடிகள் நிச்சயம் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று ‘சீதா ராமம்’. கடந்த 2022-ஆம் ஆண்டு துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘சீதா ராமம்’. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை இன்று பார்த்தாலும் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டும். அப்படி காதலின் ஆழத்தை எடுத்துரைத்த இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.அக்டோபர்கடந்த 2018-ல் இந்தியில் வெளிவந்த ரொமான்டிக் செண்டிமெண்ட் திரைப்படம் ‘அக்டோபர்’ (October). இப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.லவ்வர்மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘லவ்வர்’. ஒரு காதலன், ஒரு காதலிக்கு என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை இப்படம் தெளிவாக எடுத்துரைத்திருக்கும். இப்படத்தில் நடிகர் மணிகண்டன் ஒரு புதிய தோற்றத்தில் நடித்திருப்பார். லவ், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்திருக்கும் ‘லவ்வர்’ திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.தியாகடந்த 2020-ல் கன்னடத்தில் வெளிவந்த ரொமான்டிக் செண்டிமெண்ட் திரைப்படம் ’தியா’. இப்படம் இன்று வரையிலும் ரசிகர்களின் விருப்பமான படங்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.லைலா மஜ்னுகடந்த 2018-ல் இந்தியில் வெளியான ரொமான்டிக் செண்டிமெண்ட் திரைப்படம் ’லைலா மஜ்னு’. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.லேக்கடந்த 2022-ல் வெளிவந்த ரொமான்டிக் செண்டிமெண்ட் திரைப்படம் ’லேக்’ (Lekh). இப்படத்தை அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் கண்டு ரசியுங்கள்.கிறிஸ்டி2023-ல் மலையாளத்தில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக், செண்டிமெண்ட் திரைப்படம் ‘கிறிஸ்டி’. இப்படத்தை சோனி லைவ் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.தில் பசாராகடந்த 2020-ல் இந்தியில் வெளிவந்த காமெடி, ரொமான்டிக், செண்டிமெண்ட் திரைப்படம் ’தில் பசாரா’ (Dil Bechara). ஒரு உடல் நலம் சரியில்லாத காதலியை காதலன் எப்படி அன்பு செய்கிறான் என்பதை மையக்கருத்தாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி-யில் பார்த்து ரசிக்கலாம்.
