Connect with us

சினிமா

குழந்தை பொறந்து 2 மாசத்துல அம்மா இறந்துட்டாங்க!! நடிகை திவ்யா ஸ்ரீதர் எமோஷனல்..

Published

on

Loading

குழந்தை பொறந்து 2 மாசத்துல அம்மா இறந்துட்டாங்க!! நடிகை திவ்யா ஸ்ரீதர் எமோஷனல்..

கன்னட சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். பின் கேளடி கண்மணி என்ற தமிழ் சீரியலில் நடிக்க ஆரம்பித்து மகராசி, சன் டிவி-யின் செவ்வந்தி போன்ற தொடர்களில் நடித்தும் வருகிறார். ஏற்கனவே திவ்யாவிற்கு திருமணமாகி 5 வயது குழந்தை இருக்கும் நிலையில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்தார்.அதன்பின் சீரியல் நடிகர் ஆர்னவ் என்பவரை காதலித்து வந்த திவ்யா அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டவர், இரண்டாம் முறை கர்ப்பமாகினார். அதன்பின் அர்னவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வழக்கு வரை சென்று அதன்பின் குழந்தையை பெற்றெடுத்தார் திவ்யா.தற்போது இரு குழந்தைகளை வளர்த்து வருகிறார் திவ்யா ஸ்ரீதர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் எமோஷனலான விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அதில், என் வாழ்க்கையில் பல கேள்விகளை கேட்டுக்கொண்டேன். நான் சில சமயம் தப்பு பண்ணிருக்கிறேன் என்று யோசித்து இருக்கிறேன், ஆனால் என் பசங்கள பார்க்கும் போது நான் பெருமையாக பார்க்கிறேன். என் குழந்தைகள் தப்பு கிடையாது அவர்கள் என் வாழ்க்கை தான்.2வது வாழ்க்கையில் தப்பு செய்ததை, என்னை தப்பாக பார்க்கவில்லை இந்த உலகம். அந்த கொடுமையான வாழ்க்கையில் இருந்து இருந்தால், என் பசங்களோட வாழ்க்கை பாழாப்போய் இருந்துருக்கும். குழந்தைகளுக்காக அதை விட்டுவிட்டு போய்விட வேண்டும் என்று கூறியுள்ளார்.மேலும், தனியாக இருப்பது கஷ்டம் இல்லை, எனக்கு ரொம்ப பிடிக்கும், கூட்டமாக இருக்கிற இடம் பிடிக்காது. என் குழந்தை பிறந்து 2 மாசத்தில் என் அம்மா இறந்துட்டாங்க. கியூமோ சிகிச்சை பெறும் போது கஷ்டப்பட்டாங்க, அப்பவும் என் கூட இருந்தாங்க. என் அம்மா இல்லைன்னு எனக்கு தோணல, என் கூட தான் இருக்காங்க.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன