இலங்கை
நண்பர்களுடன் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 19 வயது இளைஞன் மாயம்
நண்பர்களுடன் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 19 வயது இளைஞன் மாயம்
மாத்தறை கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலல்ல கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாகக் கந்தர பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்று (05) பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போனவர் 19 வயதுடைய ரங்சேகொடைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காணாமல் போன இளைஞன் மேலும் 5 பேருடன் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோதே கடலில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியில் ஹிரிகெட்டிய பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட உயிர்காப்பு உத்தியோகத்தர்களும் மற்றும் கடற்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
