Connect with us

பொழுதுபோக்கு

இளையராஜாவுக்கு எல்லா இசையும் அத்துபடி; ஆனா அவரே திணறிய ஒரு இசை இருக்கு: பிரபல இயக்குனர் சொன்ன சம்பவம்!

Published

on

Ilayaraja Video

Loading

இளையராஜாவுக்கு எல்லா இசையும் அத்துபடி; ஆனா அவரே திணறிய ஒரு இசை இருக்கு: பிரபல இயக்குனர் சொன்ன சம்பவம்!

இந்திய சினிமாவில் இசையில் ஆதிக்கம் செலுத்திய முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா, 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள நிலையில், பல ராகங்கள் தெரிந்த அவருக்கு, ஒரு பாட்டு மட்டும் முழுமையாக தெரியாது என்று இயக்குனர் பாரதி கண்ணன் கூறியுள்ளார். 70-களின் இறுதியில் தொடங்கி இன்றுவரை தமிழ் சினிமாவில் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் இளையராஜா. அன்னக்கிளி படம் தொடங்கி அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், ஓடாத கதையையும் தனது இசையால் ஒட வைப்பார் என்ற பெருமையை பெற்றுள்ளார். 80-களில் இளையராஜா இசை இருந்தாலும் போதும் படம் ஹிட்டாகிவிடும் என்ற நிலை இருந்தது. அதற்கு ஏற்றார்போல், தனது பாடல்கள் மூலமாகவே பல படங்களை ஓட வைத்த பெருமை இளையராஜாவுக்கு உண்டு.பல புதுமுக இயக்குனர்களின் படங்களுக்கு இசை அமைத்துள்ள இளையராஜா, முதல் படம் இயக்கும் இயக்குனர்களுக்கு சம்பளம் வாங்காமல் இசை அமைத்து கொடுத்ததாக பலர் இன்றைக்கு யூடியூப் சேனல்களில் பேசி வருகின்றனர். தற்போது 75 வயதை கடந்தவராக இருந்தாலும், இன்றைக்கும் இளம் இசையமைப்பாளர்களுக்கு போட்டியாக வலம் வரும் இளையாஜா, ஒரு விஷயத்தில் மட்டும் கண்டிப்புடன் இருந்து வருகிறார். அது தான் பாடல் காப்புரிமை விவகாரம். தனது பாடல்களை சினிமாவில் மற்றவர்கள் பயன்படுத்த இளையராஜா அனுமதிப்பதில்லை.தனது அனுமதி இல்லால் தனது பாடல்கள் மற்றும் இசையை, படங்களில் பயன்படுத்தினால் அதற்கு காப்புரிமை கேட்டு வழக்கு தொடர்ந்துவிடுவார். அதே சமயம் தன்னிடம் அனுமதி கேட்டால் கொடுத்துவிடுவார் என்று பலரும் கூறி வருகின்றனர். தன்னை பற்றி பாசிட்டீவ் நெகடீவ் என பலதரப்பட்ட கருத்துக்கள் வந்தாலும்,அதை பற்றி எந்த ரியாக்ஷனும கொடுக்காத இளையராஜா இசையில் கவனம் செலுத்தி வருகிறார். இன்றைக்கும அவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்நிலையில், அருவா வேலு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதி கண்ணன், கண்ணாத்தாள் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்திற்கான பாடல்களை 7-9 என 2 மணி நேரத்தில் 7 பாடல்கள் கொடுத்த இளையராஜா படத்தின் முதல பாடலை பற்றி கேட்டபோது வில்லு பாட்டு என்று சொன்னேன். இதை கேட்ட, அவர் இது திருநெல்வேலியில் மட்டும் தானே இருக்கும் என்று சொன்னார். அவருக்கு அதிகம் வில்லு பாட்டு தெரியாது திணறிப்போவார். அதனால் என்னை ஒருமுறை பாட சொல்லி, கேட்டுக்கொண்டு அதன்பிறகு அந்த பாடலுக்கான டியூனை அமைத்தார். 2 மணி நேரத்தில் 7 பாடல்களை கொடுத்த அவர் அனைத்து பாடல்களுக்கும் பல்லவியும் கொடுத்தார்.அதேபோல், இந்த படத்தில் ஒரு பாடல் என் இஷ்டத்திற்கு போட்டுக்கொள்ளட்டுமா என்று கேட்டார். தாராளமாக என்று நான் சொன்னேன். அப்போது அவர் போட்ட பாடல் தான் அம்மன் புகழை பாட எனக்கு ஜென்மம் 7 வேண்டும் என்று டியூன் அமைத்து பாடியதாக பாரதி கண்ணன் கூறியுள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன