சினிமா
என் வாழ்க்கையை நாசம் செய்ய ஜாய் கிரிஸில்டா முயற்சி!! மனைவி ஸ்ருதி பிரியா…
என் வாழ்க்கையை நாசம் செய்ய ஜாய் கிரிஸில்டா முயற்சி!! மனைவி ஸ்ருதி பிரியா…
சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக கூறி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சமீபகாலமாக புகாரளித்து வந்துள்ளார். இதுகுறித்த விசாரணை சமீபத்தில் மகளிர் ஆணையத்தில் நடைபெற்று வரும் நிலையில், முதலில் நான் தான் தந்தை என்று தெரிவித்ததாக கூறப்பட்டது.தன்னை மிரட்டியதால் தான் ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டேன், பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்று ரங்கராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இதனை அறிந்த ஜாய் கிரிஸில்டா, தான் டி என் ஏ டெஸ்ட் எடுக்க தயார் என்றும் அவர் மாற்றி மாற்றி பேசுகிறார் என்றும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்.இந்நிலையில் தனது கணவர் ரங்கராஜுக்கு ஆதரவாக, அவரது மனைவி ஸ்ருதி பிரியா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அதில், என் கணவருடன் நான் உறுதியாக நின்று இறுதி வரை மாதம்பட்டி ரங்கராஜை காப்பாற்றுவேன். ஜாய் கிரிஸில்டாவின் உண்மையான நோக்கம் பணம் பறிப்பதுதான். எங்கள் குடும்ப அமைதியை குலைத்து என் வாழ்க்கையை நாசம் செய்ய ஜாய் கிரிஸில்டா முயற்சி செய்கிறார்.எனக்கு பணம், வீடு எதுவும் வேண்டாம், நான் யாரையும் பிரிக்க விரும்பவில்லை எனக்கூறிக்கொண்டு கிரிஸில்டா பணம் பறிக்க முயற்சி செய்கிறார் என்று அந்த அறிக்கையில் மாதம்பட்டி ரங்காஜின் மனைவி ஸ்ருதி பிரியா தெரிவித்துள்ளார்.
