Connect with us

இலங்கை

காதலி கதைக்காததால் 21 வயது காதலன் எடுத்த விபரீத முடிவு; இலங்கையில் சம்பவம்

Published

on

Loading

காதலி கதைக்காததால் 21 வயது காதலன் எடுத்த விபரீத முடிவு; இலங்கையில் சம்பவம்

மொனராகல  மதுருகெட்டிய சந்திக்கு அருகில் வசிக்கும் இளைஞன் ஒருவன் புதன்கிழமை (05) மாலை  தன்னைத்தானே  துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் 21 வயதுடைய ஆர்.எம். ஹஷான் இந்திக பண்டார என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார்.

Advertisement

இளைஞன் உயிழப்பதற்கு முன் தனது தாய் மற்றும் தந்தைக்கு எழுதிய கடிதமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது பணப்பையில் காதலியின் புகைப்படமும் காணப்பட்டுள்ளது.

காதலி பல நாட்களாக தொலைபேசியில் பேசாததால் மனமுடைந்த இளைஞன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போயா தனமான புதன்கிழமை (05) அன்று இளைஞனின் தாய் விகாரைக்கு சில் அனுஷ்டானம் செய்வதற்காக சென்றிருந்த நிலையில் பாட்டன் அருகிலுள்ள கடைக்குச் சென்று திரும்பி வந்தபோது அவர் இறந்து கிடந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இளைஞனின் உயிரிழப்பால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன