Connect with us

இலங்கை

குரு – புதன் வக்ர பெயர்ச்சி ; இவர்களுக்கு தொட்டது அனைத்திலும் வெற்றி! உங்கள் இராசியும் இருக்கா?

Published

on

Loading

குரு – புதன் வக்ர பெயர்ச்சி ; இவர்களுக்கு தொட்டது அனைத்திலும் வெற்றி! உங்கள் இராசியும் இருக்கா?

ஒரு மாதம் தொடங்கும் போதெல்லாம், பல கிரகங்கள் தங்கள் ராசி, நட்சத்திரத்தை மாற்றி வருகின்றன. அப்படி நடந்துக் கொண்டிருக்கும் நவம்பர் மாத்ததில், குரு மற்றும் புதன் கிரகத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் வாழ்க்கையில் பல தாக்கத்தை தரும்.

அந்த வகையில் பஞ்சாங்கத்தின்படி, வருகிற நவம்பர் 10 ஆம் தேதி அதிகாலை 12:31 மணியளவில் துலாம் ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். அதேபோல் மறுநாள், நவம்பர் 11 ஆம் தேதி, கடவுள்களின் குருவான பிருஹஸ்பதி, கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைந்து பின்னோக்கி நகரத் தொடங்கும்.

Advertisement

 ஜோதிடத்தில், புதன் மற்றும் குரு இரண்டும் மிகவும் சுப மற்றும் மங்கள கிரகமாக கருதப்படுகிறது. மேலும் இந்த இரண்டு கிரங்களும் நேர்மறையான பலன்களைத் தருகின்றன. அதன்படி இந்த கிரகங்களின் வக்ர பெயர்ச்சி மிகவும் நல்ல நிகழ்வாகக் கருதப்படுகிறது.


ரிஷபம்:
நவம்பர் மாதத்தில் குரு மற்றும் புதனின் வக்ரப் பயணம் ரிஷப ராசியினரின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையைக் கொண்டுவரும். இதுவரை தடைபட்ட பதவி உயர்வு இப்போது கிடைக்கக்கூடும். வேலைகளை மாற்ற விரும்புவோருக்கு விரும்பத்தக்க வாய்ப்புகள் கிடைக்கும். பழைய திட்டங்களில் இருந்த தடைகள் இப்போது தீர்வு பெரும். தொழிலதிபர்களுக்கு, இது விரிவாக்கத்திற்கான நேரம். குடும்ப வாழ்க்கையிலும் அமைதி நிலவும்.

Advertisement

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் குருவின் வக்ரப் பயணம் நிதி ரீதியாக மிகவும் சாதகமாக இருக்கும். தேங்கிக் கிடக்கும் பணம் திரும்பப் பெறுவீர்கள். முதலீடுகள் நல்ல வருமானத்தைத் அள்ளித் தரும். கலை, ஊடகம் அல்லது ஃபேஷன் துறைகளில் இருப்பவர்களுக்கு, இந்த நேரம் அங்கீகாரத்தைத் தரும். திருமண வாழ்க்கையில் முன்பு இருந்த கருத்து வேறுபாடுகளும் தீரும்.

விருச்சிகம்: குரு மற்றும் புதனின் வக்ரப் பயணம் விருச்சிக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை வலுப்படுத்தும். வெளிநாட்டு விவகாரங்கள் நிறைவேறக்கூடும். இந்த நேரம் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிக்கப்படும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், மன அமைதி நிலவும்.

Advertisement


கும்பம்:
குருவும் புதனும் வக்ர நிலையில் பயணிக்கப் போவதால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்கள பலன் கிடைக்கும். குறிப்பாக நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். சமூக அங்கீகாரம் மற்றும் மரியாதை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் உடல்நலம் குறித்து கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள்.


மீனம்:
குரு மற்றும் புதன் வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு முன்னேறத்தை தரும். தடைபட்ட அதிர்ஷ்டம் இப்போது உங்களுக்கு சாதகமாக இருக்கும். உறுதியான தொழில் முடிவுகளை எடுக்க இது சரியான நேரம். புதிய வாய்ப்புகள் திறக்கப்படும், மேலும் உங்கள் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளிலிருந்து பயனடைவார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன