சினிமா
சரிகமப சீசன் 5!! 4வது இறுதி சுற்று போட்டியாளர் இவரா?
சரிகமப சீசன் 5!! 4வது இறுதி சுற்று போட்டியாளர் இவரா?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. தற்போது சீசன் 5 நிகழ்ச்சியில் இறுது சுற்று போட்டியாளர்களை தேர்வு செய்யும் ரவுண்ட்கள் நடந்து வருகிறது.ஏற்கனவே, சுஹாந்திகா, ஸ்ரீஹரி, சபேசன் என மூன்று பேர் இறுதி சுற்று போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் 4வது இறுதி சுற்று போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க One & One Round நடந்துள்ளது.சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டிருக்கிறார்கள். இதில் சிறப்பாக பாடிய போட்டியாளர் இறுதி சுற்றின் 4வது போட்டியாளராக தேர்வாவார்.அப்படி, இந்த வார பிரமோ வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிறப்பாக பாடி, சின்னு அல்லது அருண் தேர்வு செய்யப்படலாம் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
