பொழுதுபோக்கு
டபுள் கேம் ஆடும் ஜாய் கிறிஸில்டா; எல்லாமே பணத்துக்காகத் தான்’… ஆதாரத்தை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி
டபுள் கேம் ஆடும் ஜாய் கிறிஸில்டா; எல்லாமே பணத்துக்காகத் தான்’… ஆதாரத்தை வெளியிட்ட மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி
தமிழ் சினிமா வட்டாராத்தில் பிரபலமாக அறியப்படுபவர் மாதம்பட்டி ரங்கராஜ். கோவை மாவட்டம் மாதம்பட்டியில் பிறந்ததன் மூலம் மாதம்பட்டி ரங்கராஜ் என அழைக்கப்படுகிறார். இவரது தந்தை சினிமா வட்டாராத்தில் மிகப் பிரபலமான சமையல் வல்லுனராக அறியப்பட்ட நிலையில், சமையல் துறையில் படிப்பை மேற்கொண்டு தானும் சிறந்த சமையல் வல்லுனர் என்பதை நிரூபித்தார். அவரது பாரம்பரிய ரெசிபிக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமையலைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் மூலம் சினிமாவில் காலாடி எடுத்து வைத்தார் மாதம்பட்டி ரங்கராஜ். தொடர்ந்து ‘பென்குயின்’ படத்திலும் நடித்தார். சினிமாவில் நடித்திருந்தாலும், அவரைப் பிரபலமாக்கியது அவரது சமையல்தான். சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் சமையல் செய்து அசத்தி பெரும் பிரபலமடைந்தார். தொடர்ந்து, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி மேலும் புகழ் பெற்றுள்ளார். தற்போது அந்த ஷோ-வில் பணியாற்றி வரும் ரங்கராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஸ்ருதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது முதல் மனைவி ஸ்ருதி, ஒரு வழக்கறிஞர். இந்நிலையில் தான், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் காஸ்டியூம் டிசனைரான ஜாய் கிறிஸில்டாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் மாலைகள் அணிந்திருக்கும் புகைப்படத்தை ஜாய் கிறிஸில்டா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட, அது காட்டுத் தீ போல் பரவியது. இந்த அலை ஓய்வதற்குள் ஜாய் கிறிசால்டா தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்து அடுத்த புகைப்படத்தை இறக்கினார். இது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த சர்ச்சை சற்று அடங்குவதற்குள் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புகைப்படம் வைரலாகியது. இத்தகைய சூழலில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிறிஸில்டா சென்னை போலீஸ் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இதேபோல், மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்தார். ஜாய் கிறிஸில்டாவின் புகாரை மகளிர் ஆணையம் விசாரித்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்துத் திருமணம் செய்ததாகவும், தன்னுடைய குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டதாகவும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கூறியதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதில் அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை என்றும் கூறினார். அப்படியானால், மாதம்பட்டி ரங்கராஜ் டி.என்.ஏ சோதனைக்கு வர வேண்டும் என ஜாய் கிறிஸில்டா தெரிவித்தார். மேலும், மாதம்பட்டி ரங்கராஜை மிரட்டி திருமணம் செய்து கொள்ள அவர் என்ன குழந்தையா? என ஜாய் கிறிஸில்டா கேள்வி எழுப்பி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், இத்தனை மாதங்களாக அமைதியாக இருந்து வந்த மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி முதல் முறையாக அறிக்கை மட்டுமல்லாமல் சில ஆதாரங்களையும் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். A post shared by Shruthi Rangaraj (@shruthi_rangaraj)அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “நான் கடந்த மார்ச் மாதம் எங்களின் குடும்ப புகைப்படத்தை வெளியிட்டபோது ஏப்ரல் மாதமே ஜாய் கிறிஸில்டா மோசமாக மெசேஜ் அனுப்பினார். சட்டப்படி பிரிந்துவிட்ட ஒரு பெண்ணுக்கு எதற்காக அவர் அத்தகைய மெசேஜுகளை அனுப்பி வைக்க வேண்டும்?. இதன் மூலம் அவரின் டபுள் கேம் வெளிப்படுகிறது. அவர் மீடியாவை தனத்து தனிப்பட்ட மற்றும் பண லாபத்திற்காக பயன்படுத்துவதும் தெரிகிறது. இது எல்லாமே பணத்துக்காக மட்டும். மேலும் எங்கள் குடும்ப அமைதியை கெடுக்க முயற்சி செய்கிறார்.A post shared by J Joy (@joycrizildaa)என் கண்வர் மிஸ்டர் ரங்கராஜை பிரித்து, அவரிடம் பணம் பறிக்கும் ஜாயின் உண்மையான நோக்கம் அவர் கைப்பட எழுதிய கடிதத்திலேயே இருக்கிறது. எனக்கு பணமோ, வீடோ வேண்டாம் என்று பேட்டிகள் கொடுத்து வரும் அவர் எழுதிய கடிதத்தில் வேறு மாதிரி இருக்கிறது. அந்த கடிதத்தில் ஜாய் எழுதியிருப்பதாவது, ரங்கராஜ் என் பணத்தேவைகளை கவனித்துக் கொள்ள வேண்டும். ரங்கராஜ் என்னை மனைவி என்று அனைவரிடமும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். ரங்கராஜ் எனக்கு ஒரு வீடு வாங்கிக் கொடுக்க வேண்டும். மாதம் ரூ. 8 லட்சம் கொடுக்க வேண்டும். இப்போ எனக்கு ரூ. 10 லட்சம் வேண்டும். ரங்கராஜ் தன் மனைவி ஸ்ருதி பிரியாவை விவாகரத்து செய்ய வேண்டும். என் கணவரிடம் இருந்து பணம் பறிப்பதுடன், சட்டப்பூர்வமான மனைவியான என்னை அவரிடம் இருந்து பிரிப்பது தான் ஜாயின் நோக்கம். என் கணவருக்கு துணையாக நின்று அவரை கடைசி வரை பாதுகாப்பேன்” என்று ஸ்ருதி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.A post shared by J Joy (@joycrizildaa)மேலும், ஜாய் கிறிஸில்டா எழுதிய கடிதத்தின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் ஸ்ருதி ரங்கராஜ், “புகைப்படம் போட்டால் எல்லாம் உன்னால் ஷோ ஆஃப் செய்ய முடியாது” என்று ஜாய் அனுப்பிய மெசேஜின் ஸ்கிரீன்ஷாட்டையும் வெளியிட்டுள்ளார். ‘என் கணவர் ரங்கராஜ் உனக்கு போலி வாக்குறுதிகள் அளித்ததாக கேள்விப்பட்டேன். அது எல்லாம் போலி வாக்குறுதிகள். நாங்கள் சந்தோஷமாக வாழ்கிறோம். அது உனக்கு தெரியும் என நினைக்கிறேன். அதனால் என் கணவரின் போலி வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்- திருமதி ஜாய் கிறிஸில்டா’ என்று அவர் அனுப்பிய மெசேஜையும் ஸ்ருதி வெளியிட்டுள்ளார். அத்துடன் சில மெசேஜுகளின் ஸ்கிரீன்ஷாட்டையும் போஸ்ட் செய்திருக்கிறார்.
