விளையாட்டு
நீங்க அழகா இருக்கீங்க, உங்க ‘ஸ்கின்கேர்’ ரகசியம் என்ன? பிரதமர் மோடியிடம் கேட்ட கிரிக்கெட் வீராங்கனை ஹர்லின் டியோல்!
நீங்க அழகா இருக்கீங்க, உங்க ‘ஸ்கின்கேர்’ ரகசியம் என்ன? பிரதமர் மோடியிடம் கேட்ட கிரிக்கெட் வீராங்கனை ஹர்லின் டியோல்!
முதல்முறையாக மகளிர் உலககோப்பை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அவரின் அழகு ரகசியம் குறித்து வீராங்கனை, ஹர்லின் டியோல் கேட்டது தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இதில் லீக், மற்றும் அரையிறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. லீக் சுற்றில், 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி அரையிறுதியில் 7 முறை சாம்பியனாக ஆஸ்திரேலியா அணியை 338 ரன்கள் சேஸ் செய்து இமாலய வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதேபோல் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்த தென்ஆப்பிரிக்க அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் முதல முறையாக இந்திய மகளிர் அணி உலககோப்பை தொடரை வென்று அசத்தியது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஸ்ரீசரணி உள்ளிட்ட அனைத்து வீரர்களுமே தங்களது அணி உலககோப்பை தொடரை வெல்ல, சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தனர், குறிப்பாக அரையிறுதியில் 338 ரன்களை சேசிங் செய்ய சதம் அடித்து கை கொடுத்தவர் ஜெமிமா. இந்த உலககோப்பை தொடரில் இந்திய அணியில் பேட்டிங் ஆல்ரவுண்டராக களமிறஙகியவர் தான் ஹர்லின் டியோல். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்ட இவர் ட்ரெஸிங் அறையில் வீராங்கனைகள் அனைவரையும மகிழ்ச்சியாக வைத்திருக்கக்கூடிய ஒரு நபர். மேலும இவர் ஒரு டான்சரும் கூட. எப்போதும் கலகலப்பாக மனதில் பட்டதை பேசும் இவர், பிரதமர் மோடியுடனான சந்திப்பில் அவரின் அழகு ரகசியம் குறித்து கேட்ட கேள்வி தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. உலககோப்பை தொடரை வென்ற இந்திய அணி வீராங்கனைகளை பிரதமர் மோடி சந்தத்து உரையாடினார். அப்போது, ஹர்லின் டியோல் சார் உங்க ஸ்கின்கேர் ரகசியம் என்ன? நீங்க ரொம்ப பளபளன்னு ஜொலிக்கிறீங்க சார். எனக்கு உங்களோட ஸ்கின்கேர் வழக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். நீங்க ரொம்ப பளபளன்னு (Glow) இருக்கீங்க சார். உண்மையச் சொல்ல வேண்டும் என்றால், அணியில் இப்படி ஒரு ஆள் இருக்கணும்னு நான் நினைக்கிறேன். எல்லாரையும் சந்தோஷமாவும், கலகலப்பாவும் வைத்திருக்கும் ஒரு ஆள். எனக்கு எப்போதாவது யாராவது சும்மா உக்கார்ந்திருக்குற மாதிரியோ, இல்லன்னா நான் ரொம்பவே வெட்டியா இருக்கிற மாதிரியோ தோணுச்சுன்னா, நான் எல்லார் பக்கத்துலயும் போய்ட்டு ஏதாவது பேசி, ஏதாச்சும் செஞ்சுட்டே இருப்பேன். ஏன்னா… என் பக்கத்துல இருக்கவங்க சந்தோஷமா இருந்தா எனக்கு ரொம்பப் பிடிக்கும் சார் என்று சொல்ல, அப்போது மோடி இங்கு அப்படி ஏதாவது செய்தீர்களா என்று கேட்கிறார். அதற்கு டியோல், இங்க வந்த பிறகு, இவங்க எங்கள அமைதியா இருங்கன்னு சொல்லி மிரட்டிட்டாங்க சார் என்று சொல்கிறார்.அதன்பிறகு மீண்டும் சார், எனக்கு உங்களோட ஸ்கின்கேர் ரொட்டீன் என்னன்னு தெரிஞ்சுக்கணும். நீங்க ரொம்ப பளபளன்னு இருக்கீங்க சார் என்று கேட்க, நான் இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை என்று மோடி சொல்கிறார். அதன்பிறகு பேசும் இந்திய அணியின் பயிற்சியாளர், “சார், கேள்விகள் எப்படி எல்லாம் வருதுன்னு பார்த்தீங்களா? ஒவவொருவரும ஒவவொரு விதமான ஆட்கள்! இவங்களுக்கு தலைமைப் பயிற்சியாளரா ஆகி இண்டு வருஷம் ஆச்சு. என் முடி எல்லாம் நரைச்சுப் போச்சு என்று சொலல அனைவரும் சிரிக்கின்றனர்.
