இலங்கை
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
பெண்ணால் ஏற்பட்ட சர்ச்சை ;செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி!
பெண் ஒருவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கசிந்த செல்வம் அடைக்கலநாதனின் உரையாடலை தொடர்ந்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை பதவியில் அவர் தொடர்வதற்கு, கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கட்சியின் முக்கியஸ்தர்களில் பெரும்பாலானவர்கள், செல்வம் அடைக்கலநாதன் தாமாகவே முன் வந்து தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் , செல்வம் அடைக்கலநாதனின் தலைமை பதவிக்கு நெருக்கடி தோன்றியுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ரெலோவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், பெண் ஒருவர் தொடர்பில் மற்றுமொருவரிடம் பேசும் குரல் பதிவுகள் கடந்த சில நாட்களாக பல சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
அந்த குரல் பதிவு வெளியானதையடுத்து, ரெலோ கட்சிக்குள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து கட்சி தலைமை பதவியிலிருந்து செல்வம் அடைக்கலநாதன் விலக வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்த ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
எதிர்வரும் 9ஆம் திகதி ரெலோ கட்சியின் தலைமைக்குழு கூட்டம் கூடவுள்ளது.
இதன்போது, கட்சித்தலைமை பதவியிலிருந்து செல்வம் அடைக்கலநாதன் விலக வேண்டுமென வலியுறுத்தவுள்ளதாக ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினர்கள் கூறியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறு கின்றன.
