Connect with us

பொழுதுபோக்கு

மெகா ஹிட் நடிகைக்கு நேர்ந்த சோகம்: பழைய நினைவுகளை மறந்த கனகா; நேரில் சந்தித்த ராமராஜன் உருக்கம்

Published

on

Ramarajan Kanaka

Loading

மெகா ஹிட் நடிகைக்கு நேர்ந்த சோகம்: பழைய நினைவுகளை மறந்த கனகா; நேரில் சந்தித்த ராமராஜன் உருக்கம்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், மலையாளத்தில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து வெற்றிப்படங்களில் நடித்துள்ள நடிகை கனகா, திரையுலககை விட்டு விலகி இருக்கும் நிலையில், அவரை சந்தித்த அனுபவம் குறித்து அவரின் முதல் பட நாயகனாக ராமராஜன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை தேவிகா. 150 படங்களுக்கு மேல் நடித்து கவிஞர் கண்ணதாசனிடம் பாராட்டுக்களை பெற்ற ஒரு நடிகை என்ற பெருமைய பெற்றுள்ள தேவிகாவின் மகள் தான் நடிகை கனகா. 1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.தமிழில் தங்கமானராசா, பிரிய இடத்துப்பிள்ளை, கோவில் காளை, கும்பக்கரை தங்கையா, பிரியவீட்டு பன்னைக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த நடிகை கனகா. அதிசய பிறவி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். 1994ஆம் ஆண்டு சித்திக்லால் இயக்கத்தில் காட் பாதர் என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அந்த திரைப்படம் 400 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி மலையாள திரையுலகில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.விஜயகாந்த், ரஜினி, சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஒரு சில படங்களில் கனகா நடித்திருந்த நிலையில், 1990-ம் ஆண்டு தனது கணவரை விவாகரத்து செய்த நடிகை தேவிகா மகள் கனகாவுடன் தனியாக வசித்து வந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கனகா நடித்து வந்த நிலையில், 2002-ம் ஆண்டு தேவிகா மரணமடைந்தார். இதன் காரணமாக தனிமையான உணர்ந்த கனகா, தந்தையுடன் பிரச்சனை, சொத்து தகராறு உள்ளிட்ட பல பிரச்சனைகளின் காரணமாக வெளியில் வராமல் தனிமையில் வசித்து வந்தார். கரகாட்டக்காரன் கனகா எங்கே இருக்கிறார் என்று பலரும கேட்கும அளவுக்கு வெளியுலக தொடர்பே இல்லாமல் இருந்த கனகாவை, கடந்த 2023-ம் ஆண்டு நடிகை குட்டி பத்மினி, நேரில் சந்தித்திருந்தார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உண்மையில் இவர் கனகா தானா என்று ஆச்சரியமாக பார்த்தனர். நடிகை கனகாவை நேரில் சந்தித்த நடிகை குட்டி பத்மினி சென்னையில் ஒரு ஹோட்டலில் நீண்ட நேரம் பேசியுள்ளனர். இத்தனை ஆண்டு நினைவுகள் பல்வேறு சம்பவங்கள் குறித்து உரையாடியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு எனது அன்பான தங்கயுடன் என்று குட்டி பத்மினி கனகாவுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் அப்போது வைரலாக பரவியது.இதனிடையே கனகாவின் முதல் பட நாயகன் ராமராஜன் கனகாவை சந்தித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். அதில் நடிகை கனகா தமது தாயாரின் மறைவுக்கு பிறகு மிகவும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் பழைய நினைவுகளைக் கூட அவர் மறந்து விட்டதாகவும், உருக்கமான குரலில் ராமராஜன் கூறியிருக்கிறார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் மீண்டும் வாருங்கள் கனகா எங்களுடன் நீங்க இருக்கீங்க என்று சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன