இலங்கை
யாழில் வெளிநாடு செல்லவிருந்த நபர் அதிரடி கைது ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
யாழில் வெளிநாடு செல்லவிருந்த நபர் அதிரடி கைது ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 5ஆம் திகதி புதன்கிழமை கந்தர்மடம் பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டுக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தநிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
