சினிமா
ரிலீஸிற்குத் தயாரான “மார்க்” திரைப்படம்… வெளியீட்டுத் தேதி எப்போது தெரியுமா.?
ரிலீஸிற்குத் தயாரான “மார்க்” திரைப்படம்… வெளியீட்டுத் தேதி எப்போது தெரியுமா.?
தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு வித்தியாசமான இடத்தை பிடித்திருக்கும் நடிகர் கிச்சா சுதீப், தற்பொழுது “மார்க்” என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்புதிய படத்தின் முக்கிய அறிவிப்புகள் நாளை வெளியாக இருப்பதாக தற்பொழுது தகவல்கள் தெரிவிக்கின்றன.சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் உருவாகும் இந்த படம், கிச்சா சுதீப்பின் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் வெளியீட்டு நாள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மாலை 06:45 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.கிச்சா சுதீப், கடந்த சில வருடங்களில் தனது நடிப்பால் அதிகளவான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்தார். “மார்க்” திரைப்படம், சினிமா வட்டாரங்களில் தற்போது பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றாகும். இந்நிலையில் தற்பொழுது வெளியான அறிவிப்பு ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
