இலங்கை
வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!
வருமான வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!
வருமான வரிக்காகப் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நபர்களும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளை நவம்பர் 30, 2025 அன்று அல்லது அதற்கு முன்னர் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு வருவாய்த் துறை இது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் எண் உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின்படி, உரிய திகதியில் வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களை 1944 அல்லது http://www.ird.gov.lk என்ற வலைத்தளம் அல்லது அருகிலுள்ள உள்நாட்டு வருவாய் பிராந்திய அலுவலகத்திலிருந்து பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
