வணிகம்
நகை வாங்க நல்ல நேரம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடி குறைவு!
நகை வாங்க நல்ல நேரம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிரடி குறைவு!
சென்னை:கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை அடிக்கடி அதிரடியான உயர்வைச் சந்தித்து, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டதால், நகை வாங்குவோர் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டது. தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகுதான் தங்கத்தின் விலையில் சிறிது மாற்றம் ஏற்பட்டு, குறையத் தொடங்கியது.இருப்பினும், நேற்றைய தினம் (நவம்பர் 6) ஒரே நாளில் இருமுறை தங்கம் விலை மாற்றப்பட்டு, காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் அதிரடியாக உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,320க்கும், ஒரு சவரன் ரூ.560 உயர்ந்து, ரூ.90,560க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று (நவம்பர் 7) தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,400க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.75,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை: ஆனால், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
