Connect with us

சினிமா

‘அவர் உனக்கு மட்டுமா கணவர்?’ – நச்சுன்னு நாலு கேள்வி கேட்டு ஜாய் கிரிஸில்டா பதிலடி

Published

on

Loading

‘அவர் உனக்கு மட்டுமா கணவர்?’ – நச்சுன்னு நாலு கேள்வி கேட்டு ஜாய் கிரிஸில்டா பதிலடி

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா விவகாரம் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜாய் கிரிஸில்டாவுக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் இரண்டாவது திருமணத்தையும், குழந்தை தன்னுடையது என்பதையும் ஒத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட ரங்கராஜ், பின்னர் இதனை முழுமையாக மறுத்துவிட்டார்.மேலும், ‘DNA’  டெஸ்ட் மூலம் அக்குழந்தை தன்னுடையது என்று நிரூபிக்கப்பட்டால் பார்த்துக்கொள்வேன்  என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த திடீர் மாற்றத்தை அடுத்து ஜாய் கிரிஸில்டா அழுது புலம்பி வீடியோக்களை வெளியிட்டார்.இதை தொடர்ந்து ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:’இந்த வருடம் மார்ச் மாதம் நான் எனது குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டபோது, ஏப்ரல் மாதத்தில் ஜாய் கிரிஸில்டாவிடமிருந்து அவமதிப்பான செய்திகளை பெற்றேன். அவர் ஊடகங்களை தவறாக பயன்படுத்துகிறார்.எங்கள் குடும்ப அமைதியை குலைக்க முயற்சி செய்வது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. அவர் தனது சொந்த கையெழுத்தில் எழுதிய கடிதத்தில், எனது கணவர் ரங்கராஜிடமிருந்து பணம் பறிப்பதும் எங்களை பிரிப்பதும்தான் தனது நோக்கம் என்று தெளிவாக கூறியிருக்கிறார்.பணம் பறித்து சட்டப்பூர்வ மனைவியான எனது குடும்ப வாழ்க்கையை நாசம் செய்வது என்பதுதான் அவரது நோக்கம். நான் எனது கணவர் ரங்கராஜுடன் உறுதியாக நிற்கிறேன். அவரை இறுதிவரை காப்பாற்றுவேன்’ என்று ஸ்ருதி தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், ஸ்ருதியின் இந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்  ‘அவரு உனக்கு மட்டுமா புருஷனா இருந்தாரு?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.இவ்வளவு நடந்த பிறகும் ரங்கராஜை ஸ்ருதி விட்டுக்கொடுக்காமல் நிற்பதற்கு சமூக ஊடகங்களில் கலவையான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.ஒரு தரப்பினர் ஸ்ருதிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் ‘ஸ்ருதி என்ன வகையான லாஜிக்கில் ரங்கராஜோடு துணை நிற்கிறார்? சொல்லப்போனால் இரண்டு பேரையுமே மாதம்பட்டி ஏமாற்றியிருக்கிறார்’ என்று விமர்சித்து வருகின்றனர். தற்போது இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன