சினிமா
ஆணும் பெண்ணும் அப்படி இருக்க முடியாதுன்னு சொன்னாங்க!! நடிகை சினேகா ஓபன் டாக்..
ஆணும் பெண்ணும் அப்படி இருக்க முடியாதுன்னு சொன்னாங்க!! நடிகை சினேகா ஓபன் டாக்..
இயக்குநர் சேரன் இயக்கி வெளியான ஆட்டோகிராஃப் படத்தின் ரீரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சினேகா ஒருசில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில், சேரன் உண்மையில் உங்களுக்கு எத்தனை லவ் இருந்தது பதில் சொல்லுங்க. இந்த படம் நடக்கும்போது கடுமையான மன உளைச்சலில் நான் இருந்தபோது என் அருகில் வந்து அமர்ந்து என்ன பிரச்சனை என கேட்டார் சேரன்.நான் ஒன்றும் இல்லை என்று சொன்னாலும் இல்லை ஏதோ இருக்கு எனக்கு தெரியும், எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினார். அங்கிருந்து தொடங்கி எங்கள் நட்பு இன்றுவரை தொடர்கிறது. சினிமாவில் என் நெருங்கிய நண்பர் சேரன்.ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது? என்று கேட்டார்கள். நண்கர்ளாக இருக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறோம். இப்படம் ரீரிலீஸ் ஆகிறது என்று தெரிந்தவுடன் என் அப்பா இந்த படத்டை பார்க்க வேண்டும் என்று சொன்னார்.இப்போது வித்தியாசமான பல காதல்கள் இருக்கு, ஆனால் காதல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு ஆட்டோகிராஃப் படம் உதாரணம், சினிமாவில் நான் நடித்த சிறந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று சினேகா தெரிவித்துள்ளார்.
