Connect with us

இலங்கை

ஒட்டுசுட்டான் அதிபரின் ஓய்வூதியத்தை நிறுத்த முறைப்பாடு!

Published

on

Loading

ஒட்டுசுட்டான் அதிபரின் ஓய்வூதியத்தை நிறுத்த முறைப்பாடு!

   சேவைக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசுவமடு மகா வித்தியாலய அதிபரின் ஓய்வூதியத்திற்க்கு எதிராக பிரதமர் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபர் சேவைக்காலத்தில் தாய் தந்தை இழந்த மாணவனுக்கு அறக்கட்டளை ஒன்றின் மூலம் வழங்கப்பட்ட நிதி மோசடி, பாடசாலை அபிவிருத்தி சங்க கணக்கில் வைப்பில் இடப்பட்டதென காட்டப்பட்ட தொகை வைப்பிலிடப்படாமை,

Advertisement

அதிக காசோலைகள் பாடசாலை சிற்றூழியர் மற்றும் ஆசிரியர்களின் பெயரில் எழுதி மாற்றப்பட்டமை,

எந்த ஒரு காசு பெறுவனவுக்கும் பற்றுச்சீட்டு வழங்கப்படாமை போன்ற மோசடிகளை முன்னிறுத்தியும் மற்றும் தற்போதைய விசுவமடு ம.வி பாடசாலை சேவை காலத்தில் பாடசாலையுடன் சம்மந்தம் இல்லாத நிதியத்தின் ஊடாக பாடசாலைக்கு நிதி சேகரித்தமை,

திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் காணொளி வாயிலாக நிதி சேகரித்தமை.

Advertisement

போன்ற முறைகேடுகளை முன்னிறுத்தி இவரின் ஓய்வூதியம் நிறுத்தப்படவேண்டும் என பிரதமர் செயலகம், இலஞ்ச ஊழல் ஆணை குழு,

வடமாகாண ஆளுநர் செயலகம், ஓய்வூதிய திணைக்களம்,வடமாகான பிரதம செயலாளர் செயலகம், தேசிய கணக்காய்வு நிறுவனம், முல்லத்தீவு அரச அதிபர் செயலகம், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வட மாகாண மாகாண கல்வி பணிப்பாளர், முல்லைத்தீவு வலயக் கல்வி பணிமனை போன்றவற்றிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன