இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ கொலை; ஒன்பது முக்கிய குற்றவாளிகள்…36 சந்தேக நபர்கள்
கணேமுல்ல சஞ்சீவ கொலை; ஒன்பது முக்கிய குற்றவாளிகள்…36 சந்தேக நபர்கள்
புதுக்கடை நீதிம்ன்றி வைத்து சுட்டுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சதித்திட்டத்தின் பின்னணியில் ஒன்பது முக்கிய குற்றவாளிகள் இருப்பது விசாரணைகளில் உறுதியானதாக கொழும்பு குற்றப்பிரிவு இன்று (7) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவிடம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் மேலும் ஒரு “பி ”அறிக்கையை சமர்ப்பித்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையில்,விளக்கமறியலில் இருந்த 5 சந்தேகநபர்கள் பூசா சிறைச்சாலையிலிருந்து ஸ்கைப் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதேவேளை சம்பவத்தின் பதினைந்தாவது சந்தேக நபரான இஷார செவ்வந்தி தப்பிச்செல்ல உதவியதாகக் கூறப்படும் 3 ஆண் சந்தேகநபர்கள் 2 பெண் சந்தேகநபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக 9 முக்கிய சந்தேக நபர்களும் 28 முதல் 36 வரையிலான சந்தேக நபர்களாகப் பெயரிடப்படுவார்கள் என்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.
முக்கிய ஒன்பது சந்தேக நபர்களில் நான்கு பேர் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
மேலும், பெயரிடப்பட்ட மற்ற நான்கு சந்தேக நபர்களையும் காவலில் எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
கொலைச் சம்பவத்தில் 35வது சந்தேக நபர் பேலியகொட குற்றப்புலனாய்வு பிரிவில் நடத்தப்பட்ட மற்றொரு வழக்கு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும், புதுக்கடை எண் 8 நீதவான் நீதிமன்றத்திலும் முறைபாடு அளிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகள் குறித்து தனி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கின் முன்னேற்றத்தை இம் மாதம் 21ஆம் திகதி அறிவிக்குமாறு உத்தரவிட்டு, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைத்து நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.
