பொழுதுபோக்கு
செகண்ட் ஹனிமூன்… குடும்பத்துடன் தயாரானா ஹீரோ; சிலையை கண்டுபிடிக்க புதிய ப்ளான் போட்ட கார்த்தி!
செகண்ட் ஹனிமூன்… குடும்பத்துடன் தயாரானா ஹீரோ; சிலையை கண்டுபிடிக்க புதிய ப்ளான் போட்ட கார்த்தி!
சுற்றுலாவுக்கு சம்மதம் சொன்ன சண்முகம்.. சிவபாலனுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த வீரா – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் கனி தூக்கத்தில் அலண்டு எழுந்த நிலையில் இன்று சண்முகம், பரணியை மீண்டும் ஹனிமூன் அனுப்பி வைக்கலாம் என்று அறிவழகன் ஐடியா கொடுக்க, வீட்டில் உள்ளவர்கள் அண்ணா கண்டிப்பா போகவே போகாது, அதுவும் கனிக்கு இப்படி ஆகி இருக்கும் போது நிச்சயமா போகாது என்று சொல்கின்றனர். இதையடுத்து குடும்பத்தோட சேர்ந்து சுற்றுலா செல்லலாம் என முடிவெடுக்கின்றனர். இப்போதும் சண்முகம் வர மாட்டான் என்பதால் கனிக்காக செல்லலாம் என்று சொல்லி விடலாம் என்று முடிவு செய்கின்றனர். பிறகு சண்முகத்திடம் பேச அவன் நான் வரல என்று சொல்கிறான், கனிக்காக என்று சொல்ல அப்போ நீங்க போயிட்டு வாங்க என்று சொல்கிறான். இறுதியில் ஒரு வழியாக சண்முகத்தை சம்மதிக்க வைக்கின்றனர். சிவபாலனையும் அழைத்து செல்லலாம் என்று சொல்ல இசக்கி அதுக்கு வீரா ஓகே சொல்லணுமே என்று சொல்ல வீரா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல என்று சொல்கிறாள். இதனால் சிவபாலனை அழைக்க சௌந்தரபாண்டி வீட்டிற்கு செல்கின்றனர். மறுபக்கம் கௌதம் வெளியே வர கவிதா ரேப் கேஸ் குறித்து வாக்குமூலம் கொடுத்தால் வெளியேவே வர முடியாது என்று சொல்ல அவன் கவிதாவை சந்திக்க செல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளதுகுடி போதையில் சிக்கிக்கொண்ட ஸ்ரீஜா.. உண்டியலில் விழுந்த ஜாதகம் – பாரிஜாதம் இன்றைய எபிசோட் அப்டேட் பாரிஜாதம் சீரியலில் நேற்றைய எபிசோடில் இசையால் கடுப்பான ஸ்ரீஜா குடிபோதையில் கார் ஓட்டி போலீஸில் சிக்கிய நிலையில் இன்று, ஸ்ரீஜா குடித்துவிட்டு கார் ஓட்டியது செய்திகளாக வெளியே வர வர்ஷினி இதை பார்த்து வீட்டில் உள்ள அனைவரையும் அழைக்கிறாள். சிந்தாமணி இதை பார்த்துவிட்டு பவரை கட் செய்து சதி செய்கிறாள். பிறகு வீட்டுக்கு வரும் ஸ்ரீஜாவை பின்பக்கமாக சிந்தாமணி அழைத்துச் சென்று மற்றும் தூங்க வைக்கிறாள். அடுத்ததாக பானுமதி வீட்டில் இருக்கும் இசையின் ஒரிஜினல் ஜாதகத்தை எடுப்பதற்காக மங்காவும் ருக்குமணியும் மாறு வேடத்தில் வருகின்றனர்.ஊதுவத்தி விற்க வந்தவர்கள் போல வீட்டுக்குள் நுழைந்து ஜாதகத்தை எடுக்கின்றனர். பிறகு அங்கிருந்து வெளியே வரும்போது பானுமதி இவர்களை கண்டுபிடித்து துரத்த ஓடி வந்து ஓரிடத்தில் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவாக ஜாதகம் கோவில் உண்டியலில் விழுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சிலையை கண்டு பிடிக்க கார்த்திக் போடும் மாஸ்டர் பிளான்.. காத்திருக்கும் திருப்பம் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் சிலையை கண்டுபிடிக்க கார்த்திக் இன்ஸ்பெக்டர் சரவணனை சந்தித்த நிலையில் இன்று, சரவணன் குருமூர்த்தியை வைத்து ஏஜென்ட் பரம்ஜோதியை சந்தித்து பேசலாம் என முடிவெடுத்து அவனை சந்தித்து பேசுகின்றனர், முதலில் பரம்ஜோதி இவர்களுக்கு உதவ மறுப்பு தெரிவிக்க சரவணன் எல்லா கேஸையும் உன்மேல போட்டு உள்ள தள்ளிடுவேன் என்று மிரட்டி சம்மதிக்க வைக்கிறான். இதையடுத்து பரம்ஜோதி ஒரு கஸ்டமர் இருப்பதாக சொல்லி சிலை எதாவது சிலை இருந்தா சொல் என்று விசாரிக்க, அவன் இல்லை என்று சொல்லி விட, இந்த திட்டம் தோல்வியில் முடிகிறது. பிறகு கார்த்திக் ரகசியமாக ஒரு திட்டத்தை சொல்கிறான்.தொடர்ந்து வீட்டிற்கு வந்த கார்த்திக் தனது குடும்பத்தாரிடம் கவலைப்படாதீங்க பாட்டி, கண்டிப்பா சிலையை கண்டு பிடித்து விடலாம், இந்த கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறான். மறுபக்கம் பரம்ஜோதி மீண்டும் குருமூர்த்தியை சந்தித்து ஒரு கஸ்டமர் பெரிய ரேட்டுக்கு சிலையை கேட்டு இருக்காங்க என்று சொல்ல குருமூர்த்தி பேராசையில் என்கிட்ட ஒரு சிலை இருக்கு என்று சொல்கிறான். அடுத்து அந்த கஸ்டமரை ஓரிடத்திற்கு சென்று சந்திக்க சொல்கிறான் பரம்ஜோதி. மேலும் கிழிந்த 10 ரூபாய் நோட்டு தான் கி ஓர்ட் என்று சொல்ல மயில்வாகனம் மாறுவேடத்தில் வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
