Connect with us

பொழுதுபோக்கு

டெக்னாலஜி இல்லாத காலம், எம்.ஜி.ஆருக்காக வாயால் ‘எக்கோ’ கொடுத்த டி.எம்.எஸ்; இந்த பாட்டு இப்போவும் சூப்பர் ஹிட் தான்!

Published

on

MGR TMS

Loading

டெக்னாலஜி இல்லாத காலம், எம்.ஜி.ஆருக்காக வாயால் ‘எக்கோ’ கொடுத்த டி.எம்.எஸ்; இந்த பாட்டு இப்போவும் சூப்பர் ஹிட் தான்!

இந்திய சினிமாவில் முன்னணி பாடகராக பல ஹிட் பாடல்களை பாடியுள்ள டி.எம்.சௌந்திரராஜன், எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமே அவர்களது குரலில் பாடி அசத்தித்தியுள்ளார். பாடல் பாடும்போது அதில் ஏதாவது ஒரு வகையில் புதுமை செய்யும் டி.எம்.எஸ் எம.ஜி.ஆருக்காக எக்கோ கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார். எம்.எஸ்.வி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது. அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து சென்சாருக்கு செல்லும் முன் எம்.ஜி.ஆருக்கு படம் ஸ்பெஷல் காட்சியாக திரைபிடப்பட்டுள்ளது. படம் பார்த்து வெளியில் வந்த எம்.ஜி.ஆர் இது எனக்கான படம் இல்லை. எம்.எஸ்.விக்காக எடுக்கப்பட்ட படம். மியூசிக் ரொம்ப நல்லாருக்கு என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் திரைப்பட பாணியில் இருந்து விலகி புதிய கதையசத்துடன் எடுக்கப்பட்ட அன்பே வா இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் போற்றப்படுகிறது.இந்த படத்தின் முதல் பாடல், ‘புதிய வானம், புதிய பூமி’ என்ற பாடல். டி.எம்.சௌந்திரராஜன் பாடிய இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் ரெக்கார்டிங்கின்போது, பாடலுக்கு எக்கோ கொடுக்க வேண்டும் என்ற டி.எம்.எஸ் விரும்பியுள்ளார். ஆனால் அந்த ரெக்கார்டிங் மிஷினில் எக்கோ வசதி இல்லை. ஆனால் மலைப்பிரதேசத்தில் எம்.ஜி.ஆர் பாடுவதால் எக்கோ இல்லாமல் எப்படி ரெக்கார்டிங் பண்ண முடியும் என்று யோசித்துள்ளனர். அப்போது டி.எம்.எஸ். நானே மைக் அருகிலும் தூரத்திலும் இருந்து பாடி எக்கோ மாதிரி செய்கிறேன் என்று கூறியுள்ளார். இதை கேட்ட எம்.எஸ்.வி மற்றும் படக்குழுவினர் அனைவரும் அருமையான யோசனை என்று சொல்லி அதே மாதிரி செய்யுமாறு கூறியுள்ளனர். அதன்படி டி.எம்.எஸ் எக்கோ கொடுத்து பாடிய அந்த பாடலுக்கு, எம்.ஜி.ஆர் சிறப்பாக நடனம் ஆடியுள்ளார். இந்த தகவலை டி.எம்.எஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன