இலங்கை
பாடசாலை நேரம் நீடிப்பு; வெளியானது அறிவிப்பு
பாடசாலை நேரம் நீடிப்பு; வெளியானது அறிவிப்பு
பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நேர நீடிப்பானது தரம் 5இலிருந்து 13ஆம் தரம் வரை அமுல்படுத்தப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்.
பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் விளக்கமளித்து கொழும்பில் நேற்று (06) நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிக்கப்படும். அவ்வாறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். உதாரணமாக குறிப்பிடுவதானால் முதலாம் தர மாணவர்களின் பாடசாலை நேரத்தில் மாற்றம் ஏற்படாது.
தற்போது காலை 7.30 மணியிலிருந்து 11.45மணி வரையான காலம் அவ்வாறு நீடிக்கப்படும். இரண்டாம் தரத்துக்கும் 7.30 மணியிலிருந்து 11.45 மணி வரையிலான கற்றல் நடவடிக்கைகள் அவ்வாறே முன்னெடுக்கப்படும்.
அதேவேளை 03, 04ஆம் தர மாணவர்களுக்கு 7.30 மணியிலிருந்து 1.00 மணி வரையான கற்றல் காலம் அவ்வாறே இடம்பெறும். அதிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
மேலும் 05 ஆம் தரத்திலிருந்தே நேர மாற்றம் ஏற்படும். 05ஆம் தர மாணவர்களுக்கு 7.30 மணியிலிருந்து 2.00 மணிவரை கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும், அதாவது, 06ஆம் தரத்திலிருந்து எதிர்வரும் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் காலை 7.30 மணிமுதல் பகல் 2.00 மணிவரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்
