Connect with us

சினிமா

மலையாளத்தை விட தமிழ் தான் பிடிக்கும்.. ‘காந்தா’ பட விழாவில் உணர்ச்சிபூர்வமாக பேசிய துல்கர்

Published

on

Loading

மலையாளத்தை விட தமிழ் தான் பிடிக்கும்.. ‘காந்தா’ பட விழாவில் உணர்ச்சிபூர்வமாக பேசிய துல்கர்

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான துல்கர் சல்மான், தனது அடுத்த தமிழ் படமான ‘காந்தா’ பட விழாவில் கலகலப்பாகவும், மனம் திறந்தும் பேசியுள்ளார்.அந்த விழாவில் துல்கர் சல்மான் கூறிய சில நகைச்சுவையான கருத்துகள் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகின்றன. குறிப்பாக, “எனக்கு மலையாளத்தை விட தமிழ் தான் பிடிக்கும்!” என்ற அவரது உரை, தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘காந்தா’, ஒரு உணர்ச்சி மிக்க டிராமா மற்றும் அதிரடி கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குவது பிரபல இயக்குநர் செல்வமணி செல்வராஜ்.‘காந்தா’ திரைப்படத்தில் துல்கருடன் சேர்ந்து நடித்திருப்பவர் பாக்ய ஸ்ரீ. இவர்களின் ஜோடி தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என்று கூறப்படுகிறது.பட விழாவில் துல்கர் சல்மான் மிகச் சிறப்பாக பேசினார். “இந்த படத்தோட கதைய கேட்ட நேரத்துல நான் இன்னும் 8-10 படங்கள்ல ஒப்பந்தம் ஆகி இருக்கலாம்! இந்த படத்தின் படப்பிடிப்பு லேட் ஆகிக்கொண்டு போகும் போது எனக்கே பயமா இருந்த வேற யாரையும் ஹீரோவா மாத்திடுவாங்களோ என்று… அத்துடன் எனக்கு மலையாளத்தை விட தமிழ் தான் பிடிக்கும்.” என்று அவர் சிரித்தபடி கூறிய கருத்துகள் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. அத்துடன், இப்படம் 2025 நவம்பர் 14 அன்று திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில் துல்கரின் தமிழ் சினிமா பயணத்தில் புதிய வெற்றிக் கல் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன