இலங்கை
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம்! (உரை ஒரே பார்வையில் )
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பம்! (உரை ஒரே பார்வையில் )
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை ஆரம்பமாகியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றில் வரவு செலவுத் திட்ட உரையை தற்சமயம் ஆரம்பித்துள்ளார்.
இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வைக்கும் இரண்டாவது வரவு செலவுத் திட்ட உரை என்பது குறிப்பிடத்தக்கது.
2030 ஆம் ஆண்டுக்குள் கடனை 87% ஆகக் குறைக்க நடவடிக்கை
2030 ஆம் ஆண்டுக்குள் கடனை 87% ஆகக் குறைக்க அரசு எதிர்பார்ப்பதோடு, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசுமவை 2026 ஆம் ஆண்டு மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.
அடுத்த ஆண்டில் புதிய டிஜிட்டல் சேவை
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் புதிய டிஜிட்டல் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச சொத்து முகாமைத்துவ சட்டம்
2026 இல்
அரச சொத்து முகாமைத்துவ சட்டம் 2026 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு 3 கட்டங்களாக அதிகரிக்கப்படும்
அரச ஊழியர்களின் சம்பளத்தை 3 கட்டங்களாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டுக்குள் கடனை 87% ஆகக் குறைக்க நடவடிக்கை
2030 ஆம் ஆண்டுக்குள் கடனை 87% ஆகக் குறைக்க அரசு எதிர்பார்ப்பதோடு, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசுமவை 2026 ஆம் ஆண்டு மீண்டும் மீளாய்வு செய்ய நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.
அரச வருமானம் 16% ஆக அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பு
அரச வருமானம் 16% ஆக அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பு
அரச சொத்து முகாமைத்துவ சட்டம் 2026 இல்
அரச சொத்து முகாமைத்துவ சட்டம் 2026 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தவறிழைத்தவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படமாட்டாது
மக்களுக்கு எதிராக எவரேனும் தவறு இழைத்திருப்பார்களாயின், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விடயத்தில் யாருக்கும் பாரபட்சம் காட்டப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2029 வரை தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம்
2029 ஆம் ஆண்டு வரையில் தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2025 இல் இறக்குமதி செலவீனம் அதிகரிப்பு
2025 ஆண்டில் இறக்குமதி செலவீனம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2032 இல் கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்ப்பு
2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி 1373 மில்லியன் அமெரிக்க டொலர்
2026 ஆம் ஆண்டு 15.3 மற்றும் 2027 ஆம் 15.4 வீதங்களில் தேசிய வருமானத்தை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடம் இதுவரை 1373 மில்லியன் டொலர் வரை வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரவித்துள்ளார்.
வேலையின்மை சதவீதம் குறைப்பு – அரச வருமானம் அதிகரிப்பு
நாட்டில் வேலையின்மை வீதத்தை 4.5 இல் இருந்து 3.8 ஆக குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரவித்துள்ளார்.
கடந்த வருடத்தை காட்டிலும் அரச வருமானம் 900 பில்லியன் ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரச முதலீட்டை 4 சதவீதமாக அதிகரிப்பதற்கான திட்டம் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக நிதி மோசடிகள்: இணைய வழியில் நிதி முறைகேடு குறித்து எச்சரிக்கை
இணைய வழியாக சமூக ஊடக வலையமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் செய்யப்படும் நிதி முறைகேடுகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்நிலையில் நடைபெறும் மோசடி நடவடிக்கைகள், குறிப்பாக டெலிகிராம், வாட்ஸ்அப் கணக்குகள் மற்றும் பிற சமூக ஊடகக் குழுக்கள் மூலம் செய்யப்படும் நிதி மோசடிகள் குறித்து தினமும் புகார்கள் பதிவவதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழிற்துறை அபிவிருத்திக்கு 1000 மில்லியன் ரூபாய்
முதலீட்டு வலயங்களுக்கான சேவை அபிவிருத்திக்காக 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
காணி தகவல் உட்பட மத்திய டிஜிட்டல் கட்டமைப்புக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வௌிநாட்டு முதலீட்டாளர்களுக்காக வதிவிட விசா முறைமை அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்பான புதிய முறைமை ஒன்று தயாரிக்கப்படவுள்ளது.
சிறிய மற்றும் நடுத்த அளவிலான தொழில்முனைவோருக்கு 5900 மில்லியன் ரூபாய் கடன் வழங்க ஒதுக்கிடப்படும்
தொழிற்துறை அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சேவை வழங்கும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க நிதி ஒதுக்கீடு –
ஜனாதிபதி
கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சேவை வழங்கும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்க 200 மி.ரூ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
விவசாய அபிவிருத்திக்காக 1,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நீரியல் வளப் பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுலா தொழிற்துறை அபிவிருத்திக்காக 3,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்திற்கான பல்வேறு கடன் வசதிகளுக்காக 80,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா தொழில் நிபுணர்களை உருவாக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளக விமான சேவைகளை விரிவுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தை விரிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
2026 மார்ச் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை
டிஜிட்டல் பொருளாரத்தை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கு 25,500 மில்லியனுக்கும் அதிக முதலீட்டை பெறவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சிக்காக டிஜிட்டல் பொருளாதார பேரவையை ஸ்தாபிக்கப்படும்
2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படும்
காணி தகவல் உட்பட மத்திய டிஜிட்டல் கட்டமைப்புக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.
க்ளீன் ஶ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு 6,500 மில்லியன்
பிரஜைகளின் தரவுகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் கிவ் ஆர் குறியீடுக்காக 5,000 க்கு குறைந்த கொடுக்கல் வாங்கலுக்கான சேவை கட்டணம் நீக்கப்படும் என தெரிவித்தார்.
AI தரவு மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் தொழில்நுட்ப கோபுரங்களை அமைப்பதற்கு முதலீட்டு வரியை 5 வருடங்களுக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மஹாபொல புலமைப்பரிசில் 2500 ரூபாயினால் அதிகரிப்பு
அதேநேரம் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என அறிவித்தார்.
தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபாயினால் அதிகரிக்கப்படும்.
விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5,000 ரூபாய்
விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளை ஒழிப்பதற்கு
விஷ போதைப்பொருளை ஒழிப்பதற்கான சுற்றிவளைப்புகளுக்கு 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 1,550 ஆக அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதில் வரவுக் கொடுப்பனவுக்கான 200 ரூபாவை அரசாங்கம் வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
82 ஆதார வைத்தியசாலைகளை 5 வருடங்களில் அபிவிருத்தி செய்வதற்கு 31,000 மில்லியன் ரூபாய்
82 ஆதார வைத்தியசாலைகளை 5 வருடங்களில் அபிவிருத்தி செய்வதற்கு 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
16 மாடிகளைக் கொண்ட தேசிய இதய சிகிச்சை மையத்தை நிர்மாணிப்பதற்கு 200 மில்லியன் ஒதுக்கப்படும்.
அதன் மொத்த செலவினம் 12,000 மில்லியன் ரூபாவாகும்.
சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்காக 4.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வட, கிழக்கு விளையாட்டு தொகுதிகளை அமைக்க 100 மில்லியன்
இளைஞர்களிடைய விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
அதேநேரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் விளையாட்டு கட்டிட தொகுதிகளை அபிவிருத்திக்கு 100 மில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ அறிக்கையின் பிரகாரம் மாதாந்தம் 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக நிதி உதவி
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அரச பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு
அரச பல்கலைக்கழக மருத்துவ பீட அபிவிருத்திக்கு 11 மி.ரூ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
நாடு முழுவதும் சுகாதார மையங்கள் நிறுவப்படும்
5,000 முதல் 10,000 பேருக்கு சேவை செய்யும் வகையில் நாடு முழுவதும் சுகாதார மையங்கள் நிறுவப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மையங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடித் திட்டத்திற்காக 1,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மகளிர் வலுவூட்டலுக்கு நிதி ஒதுக்கீடு
மகளிர் வலுவூட்டலுக்கு 240 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
யானை – மனித மோதலுக்கு தீர்வு காண நிதி ஒதுக்கீடு
யானை
மனித மோதலுக்கு தீர்வு காணும் பொருட்டு வனவள திணைக்களத்துக்கு வாகனங்கள் கொள்வனவு செய்யவும், மின்வேலி அமைக்கவும் 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்கு கடன் வழங்கலுக்கு நிதி ஒதுக்கீடு
ஊடகவியலாளர்கள் உயர்கல்வி மற்றும் ஊடக தொழிற்றுறைக்குரிய உபகரணங்களை கொள்வனவு செய்ய கடன் வழங்கலுக்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு விசேட சலுகைகள்
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு சலுகை வட்டியில் வீட்டு கடன் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதம் 2030 இல் பூர்த்தி செய்யப்படும்
2030 இல் உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இலக்கை அடையும் வகையில் தேசிய பாலுற்பத்தி நிகழ்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சாத்தியவள ஆய்வு உள்ளிட்ட ஆரம்பப் பணிகளுக்காக 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக அபிவிருத்திக்கு 350 மில்லியன்
பாதுகாப்பான கடற்பயணங்களை உறுதிப்படுத்தல் மற்றும் துறைமுகங்களில் காணப்படும் நெரிசல்களை குறைத்தல் என்பனவற்றை இலக்காகக் கொண்டு வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 350 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்படும் என ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்துக்கு தீர்வு காண நிதி ஒதுக்கீடு
மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அனர்த்தத்துக்கு தீர்வு காணும் வகையில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த 5000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக வீதியின் முதலாம் கட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு
மத்திய அதிவேக வீதியின் கடவத்தை – மீரிகமை வீதிப் பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு 66,150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
வீதி பாதுகாப்பு வேலை திட்டத்தை அமுல்படுத்த நிதி ஒதுக்கீடு
வீதி பாதுகாப்பு வேலை திட்டத்தை அமுல்படுத்த 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி ஒதுக்கீடு
ஒட்டுமொத்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 342,000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தூய்மையான குடி நீர்த்திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு
தூய்மையான குடி நீர்த்திட்டத்துக்கு 85,700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மீன்பிடித் துறைக்கு நிதி ஒதுக்கீடு
மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மீனவர்களுக்கு உயிர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
எரிசக்தி நிலைமாற்றச் சட்டம் அடுத்த ஆண்டுக்குள்
எரிசக்தி நிலைமாற்றச் சட்டம் அடுத்த ஆண்டுக்குள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி தொிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் அடுத்த ஆண்டு செயற்படுத்தப்படும்
கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செயற்படுத்தப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
திண்ம கழிவகற்றலுக்கு நிதி ஒதுக்கீடு
திண்ம கழிவகற்றலுக்கு 900 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தில் 27,000 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும்
அடுத்த வருடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மலையக இந்திய வீட்டுத்திட்டத்திற்காக 4,290 மில்லியன்
இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மலையக பகுதிகளில் நிர்மாணிக்கப்படும் 2,000 வீடுகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 4,290 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச சேவைக்கு 75,000 பேர் ஆட்சேர்ப்பு
அரச சேவைக்கு 75,000 பேரை உரிய முறைமையின் கீழ் புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கான 2ம் கட்ட சம்பள அதிகரிப்பு ஜனவரியில்
அரச ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பிற்காக 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டாம் கட்ட சம்பள அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி முதல் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டியில் வீடமைப்பு கடன்
சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கான வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை வழங்க வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் பண்டிகை முற்பணம் 15,000 ஆக அதிகரிப்பு
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை 10,000 ரூபாவாக வழங்கப்பட்ட பண்டிகை முற்பணத் தொகையினை 15,000 ரூபாவாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தெரு நாய்கள் பாதுகாப்பு வசதிகளை அறிமுகப்படுத்தல்
செல்லப்பிராணிகளை அடக்கம் செய்தல், தகனம் செய்தல் மற்றும் தெரு நாய்கள் பராமரிப்பதற்கான சேவைகளை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் கொழும்பு மற்றும் பியகமை உள்ளூராட்சி அதிகார சபைகளில் முன்னோடிக் கருத்திட்டமொன்றை செயற்படுத்த ரூபா 100 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு நிதி ஒதுக்கீடு
தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் முகமாக வடக்கு தென்னை முக்கோண வலயத்துக்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை மறுசீரமைக்
