Connect with us

பொழுதுபோக்கு

Bigg boss 9: முக்கிய போட்டியாளர் வெளியேற்றம், வாக்கு அடிப்படையில் வந்த ஆக்ஷன்: இவருக்கே இந்த நிலைமையா?

Published

on

Tushaar

Loading

Bigg boss 9: முக்கிய போட்டியாளர் வெளியேற்றம், வாக்கு அடிப்படையில் வந்த ஆக்ஷன்: இவருக்கே இந்த நிலைமையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன், ஆரம்பம் முதலே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வந்தாலும், அவ்வப்போது எதிர்பார்பபை ஏற்படுத்தும் வகையில், சென்றுகொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்ட ஒருவர், தற்போது நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், 8-வது மற்றும் தற்போது நடைபெற்ற வரும் 9-வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு இல்லை எனறாலும், விஜய் சேதுபதி பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால இந்த 9-வது சீசன் ஆரம்பம் முதலே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.இந்த விமர்சனங்களுக்கு முக்கிய காரணம், அகோரி கலையரசன், வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் உள்ளிட்ட சில போட்டியாளர்கள் தான் என்று கூறப்படுகிறது. ஆனாலும் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம், இயக்குனர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் அகோரி கலையரசன் வெளியேற்றப்பட்டார்.2nd Eviction🥳#Tushaar has been officially evicted from #BiggBossTamil9 house.Chance wasted,Even after VJS advice he still continues with Aurora.Anyways I won’t blame her.Bye ByeAll the best to Tushaar.FJ saved by whom?😂#BiggBossTamil#BiggBoss9Tamilpic.twitter.com/RIpRijAUVrஒவ்வொரு வாரமும் யார் வெளியேற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிகழ்ச்சியை பார்க்க தூண்டி வருகிறது. அந்த வகையில், இந்த வாரம், வீண் சண்டை சச்சரவுகள் பார்ப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், எஃப்.ஜே. வெளியேறுவதாக கூறப்பட்டிருந்தது. வெளியேறுவதே நல்லது என்று பலர் எதிர்பார்த்தனர். அவர் வெளியேறினால், அந்த சார்ட் உண்மை என்று நிரூபிக்கப்படும் என்றும் ரசிகர்கள் காத்திருந்தனர்.இதனிடையே தற்போது அனைவரின் கணிப்புக்கும் ஷாக் கொடுக்கும வகையில், சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட துஷார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். வாக்குகளின் அடிப்படையில் அவர் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் சரியான தலைவராக நடந்துகொள்ளவில்லை என்று கூறி அவரது பதவி பாதியிலேயே பறிக்கப்பட்டது. தோல் சம்பந்தமான பிரச்சனையால், மருத்துவச் சிகிச்சைக்காக கெமி வெளியே அழைத்து செல்லப்பட்ட நிலையில, துஷார் வெளியேற்றப்படடது பெரும் விவாதமாக மாறியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன