Connect with us

பொழுதுபோக்கு

OTT: நொடிக்கு நொடி பரபரப்பு… உறைய வைக்கும் ஹாரர், திரில்லர் படங்கள்; இந்த வாரம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

Published

on

fairy

Loading

OTT: நொடிக்கு நொடி பரபரப்பு… உறைய வைக்கும் ஹாரர், திரில்லர் படங்கள்; இந்த வாரம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

ஒவ்வொரு வாரமும் வீக் எண்டில் ரசிகர்கள் தங்களது நேரத்தை செலவிடும் வகையில் ஓ.டி.டி-யில் படங்களை பார்த்து மகிழ்கின்றனர். இதற்காகவே ஓ.டி.டி தளங்களும் ஒவ்வொரு வாரமும் புதுபுது படங்களை ஸ்ட்ரீம் செய்து ரசிகர்களை கவந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஹாரர், திரில்லர் ரசிகர்களுக்காக பார்த்தாலே உறைய வைக்கும் படங்களின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.பிளாக் ஃபோன் 2ஸ்காட் டெரிக்சன் இயக்கத்தில் நடப்பாண்டு வெளியான திரைப்படம் ‘பிளாக் ஃபோன் 2’ (Black Phone 2). சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர் படமான  ‘பிளாக் ஃபோன் 2’  கடந்த 4-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது. இப்படத்தை ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.ஃபேரி லாண்ட்கடந்த 2023-ல் வெளிவந்த ஃபீல் குட் ஹாலிவுட் திரைப்படம் ‘ஃபேரி லாண்ட்’ (Fairyland). இந்த ஃபீல் குட் படம் கடந்த 4-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது. தி ஸ்மாஷிங் மெஷின்டபிள்யூ. டபிள்யூ. ஈ வீரர் ராக் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பியோகிராஃபி திரைப்படம் ‘தி ஸ்மாஸிங் மெஷின்’ (The Smashing Machine). இப்படம் முன்னாள் மல்யுத்த வீரரும், தற்காப்புக் கலைஞருமான மார்க் கெர் பற்றிய பியோகிராஃபி படமாகும். இத்திரைப்படம் கடந்த 4-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் பார்த்து மகிழலாம்.வால்ட்ஸிங் வித் ப்ராண்டோகடந்தாண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் ‘வால்ட்ஸிங் வித் ப்ராண்டோ’ (Waltzing with Brando). இப்படம் பிரபலமான ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ பற்றிய கதையாகும். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படம், கடந்த 4-ம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் ரிலீசானது.டைலர் பாரிஸ் பைண்டிங் ஜாய்ஹாலிவுட் நடிகை ஷானன் தோர்ன்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டைலர் பாரிஸ் பைண்டிங் ஜாய்’ (Waltzing with Brando). இப்படம் 5-ஆம் தேதி  அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் ரிலீசான நிலையில் ரசிகர்கள் இப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.மேக்ஸ்டன் ஹால் தி வேல்ட் பிட்வீன் அஸ்கடந்தாண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் டீன் ஏஜ் ரொமான்டிக் வெப் தொடர் ‘மேக்ஸ்டன் ஹால் தி வேல்ட் பிட்வீன் அஸ்’ (Maxton Hall – The World Between Us). இத்தொடரில் முதல் சீசன் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் இரண்டாவது சீசன் 7-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓ.டி.டி-யில் ரிலீஸாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன