வணிகம்
சவரனுக்கு ரூ.240 உயர்வு! நகை வாங்க இது சரியான நேரமா? இன்றைய தங்கம் விலை என்ன?
சவரனுக்கு ரூ.240 உயர்வு! நகை வாங்க இது சரியான நேரமா? இன்றைய தங்கம் விலை என்ன?
கடந்த அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. குறிப்பாக அக்டோபர் 17-ஆம் தேதி இந்த விலை உயர்வு உச்சத்தைத் தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் பின்னர், தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு விலை குறையத் தொடங்கியது. அக்டோபர் 22-ஆம் தேதி ஒரு சவரனுக்கு ரூ.3,680-ம், அதைத் தொடர்ந்து 28-ஆம் தேதி ரூ.2,200-ம் சரிந்து, ஒரு கட்டத்தில் ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்திற்கும் கீழ் சென்றது.எனினும், கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை மீண்டும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.90 ஆயிரம் என்ற நிலையில் ஏறுவதும், பின்னர் குறைவதுமாக நீடிக்கிறது.நேற்றைய விலை நிலவரம்நேற்று முன்தினம் (நவம்பர் 6) சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்திருந்த நிலையில், நேற்று (நவம்பர் 7) தங்கம் விலை சற்று குறைந்தது.22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,270-க்கு விற்பனையானது.ஒரு சவரன் தங்கம் ரூ.400 குறைந்து, ரூ.90,160-க்கு விற்பனை செய்யப்பட்டது.இன்றைய விலை நிலவரம்: மீண்டும் உயர்வு!நேற்று விலை குறைந்திருந்த நிலையில், இன்று (நவம்பர் 8) தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.வெள்ளி விலை நிலவரம்தங்கம் விலையில் மாற்றம் இருந்தும், வெள்ளி விலையில் தொடர்ந்து மாற்றம் இன்றி நீடிக்கிறது.ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கும்,ஒரு கிலோ வெள்ளி ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தொடர்ந்து இந்த ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதால், தங்கம் வாங்க திட்டமிடுவோர் நிதானத்துடன் செயல்பட வேண்டியுள்ளது.
