Connect with us

பொழுதுபோக்கு

தி.மு.க.வுக்காக பேச்சாளர், ஆனா இப்போ…? வடிவேலுக்கு அந்த தகுதி இல்லை: பிரபல இயக்குனர் சொன்ன வார்த்தை!

Published

on

Vadivelu 11

Loading

தி.மு.க.வுக்காக பேச்சாளர், ஆனா இப்போ…? வடிவேலுக்கு அந்த தகுதி இல்லை: பிரபல இயக்குனர் சொன்ன வார்த்தை!

தமிழ் சினிமாவில் காமெடியில் முத்திரை பதித்த வடிவேலு மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், கேப்டன் விஜயகாந்த இறப்புக்கு செல்ல அவருக்கு தகுதியே இல்லை என்று பிரபல இயக்குனரும், காமெடி நடிகருமான பாரதி கண்ணன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்தபோது அவர்களுடன் துணை நடிகராக நடித்து பிரபலமானவர் தான் வடிவேலு. தனக்கென தனி ஒரு ஸ்டைலையும் பாடிலாங்வேஜ்யும் வளர்த்துக்கொண்டு சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.  ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் தொடங்கி இன்றைய சிம்பு வரை பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள வடிவேலு, பல பாடல்களையும் பாடியுள்ளார். அவரது பாடல்கள் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இம்சை அரசன், தெனாலி ராமன், எலி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள வடிவேலு, சில வருடங்களாக பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தார் இதற்கு முக்கிய காரணம் கடந்த 2011 சட்டசபை தேர்தலில் அவர் கேப்டன் விஜயகாந்த் குறித்து பிரச்சாரத்தில் பேசியது தான் முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. அதன்பிறகு, சமீபத்தில் மீண்டும் நடிக்க தொடங்கிய வடிவேலுவுக்கு படங்கள் எதுவும் பெரிதாக கை கொடுக்கவில்லை. ஹீரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் தோல்வியடைந்தது. உதயநிதியுடன் நடித்த மாமன்னன் திரைப்படம் ஓரளவு வெற்றியை பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் பகத் பாசிலுடன் மாரீசன் என்ற படத்தில் நடித்திருந்தார். இதனிடையே கேப்டன் விஜயகாந்துடன் மோதல் இருந்திருந்தாலும், அவரது இறப்பிற்கு வடிவேலு சென்றிருக்க வேண்டும். அப்படி இல்லை என்றாலும ஒரு இரங்கலாவது தெரிவித்திருக்க வேண்டும் என்ற பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில், இயக்குர் பாரதி கண்ணன் ஒரு பேட்டியில், வடிவேலு விஜயகாந்த் இறப்புக்கு போயிருக்க வேண்டும்.போக முடியவில்லை என்றாலும், நான் இதேபோல் செய்துவிட்டேன் என்று அவருக்கு ஒரு இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும். நெப்போலியன் சொன்னத நான் தவறு செய்துவிட்டேன். இவ்வளவு பெரிய ஒரு தர்மவானை அப்படி பேசியிருக்க கூடாது. இப்போது மனம் வருந்துகிறேன். இதனால் அவரின் இறப்புக்கு கூட என்னால் போக முடியவில்லை என்று கூறி இருக்கலாம். முன்பு தி.மு.க.வுக்காக பேச்சாளர் ஆனார். அதே தி.மு.க இன்ற விஜயகாந்துக்கு மரியாதை செய்துவிட்டார்கள். அதே சமயம் வடிவேலுவால் அந்த இடத்திற்கே போக முடியவில்லை. சில நேரங்களில் நமது தகுதி அறிந்து வார்த்தைகளை விட வேண்டும். வடிவேலுவுக்கு கேப்டன் இறப்பில் கலந்துகொள்ள பாக்கியம், தகுதி இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்று பாரதி கண்ணன் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன