இலங்கை
நள்ளிரவில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; துப்பாக்கியால் பல முறை சுட்டு கொலை; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
நள்ளிரவில் இலங்கையை உலுக்கிய சம்பவம் ; துப்பாக்கியால் பல முறை சுட்டு கொலை; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்
நேற்று நள்ளிரவில் கொழும்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பிலான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
குறித்த காணொளியில் சந்தேக நபர் ஒருவர் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து மற்றொரு நபரை பல முறை துப்பாக்கியால் சுடும் காட்சிகள் பதிவாகியுள்ளதுடன் துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான நபர் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் காரொன்றை அவர் மீது ஏற்றி சந்தேக நபர் தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
