சினிமா
பிக் பாஸ் வீட்டில் டங்குவாரு அறுந்துவிடும், எந்த பாம்பு வரும்.. அகோரி கலையரசன் பரபரப்பு பேட்டி!
பிக் பாஸ் வீட்டில் டங்குவாரு அறுந்துவிடும், எந்த பாம்பு வரும்.. அகோரி கலையரசன் பரபரப்பு பேட்டி!
பிக் பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் களமிறங்கிய நிலையில், முதல் வாரம் முடிவதற்குள், நந்தினி வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார்.பின், மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்ற பிரவீன் காந்தி முதல் வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 9ன் ஷோவில் தொடர்ந்து அப்சரா, ஆதிரை, கலையரசன் என இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.இந்நிலையில், தற்போது கலையரசன் பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், நான் எலிமினேட் ஆன வாரத்தில் அரோரா, கம்ருதீன், வினோத் ஆகியோரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டதால் தான் நான் வெளியே வந்தேன். பிக்பாஸுக்கு வந்தால் அது கொடுப்பார்கள், இது கொடுப்பார்கள் என்றும், அது ஸ்க்ரிப்ட்டட் என்பதும் கிடையாது.அந்த நிகழ்ச்சியில் ஒரு நாளை கடப்பது யுகத்தை கடப்பது போன்று இருக்கும். டங்குவாரு அறுந்துபோயிடும். அந்த வீடே ஒரு புதிரானது. எந்த புற்றிலிருந்து எந்த பாம்பு வரும் என்று தெரியாது” என்று தெரிவித்துள்ளார்.
