இலங்கை
மாத்தறையில் சட்டவிரோத வல்லப்பட்டைகளுடன் மூவர் கைது
மாத்தறையில் சட்டவிரோத வல்லப்பட்டைகளுடன் மூவர் கைது
சட்டவிரோதமாகக் வல்லப்பட்டையை தம்வசம் வைத்திருந்த 3 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாத்தறை, கொட்டபொல பகுதியில் தெனியாய வனப் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 110 கிலோகிராம் 450 கிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 662 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என்றும் இராணுவம் தெரிவித்துள்ளது.
