சினிமா
மியூச்சுவல் டைவர்ஸ், என் விவாகரத்திற்கு காரணம் மாதம்பட்டி.. புலம்பும் ஜாய் கிரிஸில்டா!
மியூச்சுவல் டைவர்ஸ், என் விவாகரத்திற்கு காரணம் மாதம்பட்டி.. புலம்பும் ஜாய் கிரிஸில்டா!
தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா படங்களை தாண்டி சமையல் தொழில் மூலம் தமிழக மக்களிடம் அதிகம் பிரபலம் ஆனார்.எந்த ஒரு பெரிய தொழிலதிபர், பிரபலங்கள், அரசியல்வாதி வீட்டு விசேஷமாக இருந்தாலும் இவரது சமையல் தான் இருக்கும். ஆரம்பித்த வேகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட மாதம்பட்டி ரங்கராஜ் சொந்த வாழ்க்கை மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் மாதம்பட்டி. தற்போது இவரை பற்றிய செய்திகள் தான் அதிகம் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது.ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார், என் குழந்தைக்கு அப்பா அவர்தான் என ஒப்புக்கொள்ள வேண்டும் என புகார் அளித்தார்.இது தொடர்பாக இரு தரப்பும் அறிவிப்பு வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தன் முதல் திருமணம் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில், ” என் முதல் திருமணத்தில் பல பிரச்சனைகள் இருந்தது. அப்போது மாதம்பட்டி தான் ஏன் தங்கம் ஃபெட்ரிக்கின் பணத்தில்தான் நீயும், ஜேடனும் வாழ வேண்டுமா?ஏன் நான் பார்த்து கொள்ள மாட்டேனா? எதற்காக இந்த விவகாரத்தை இழுத்துக்கொண்டிருக்கிறாய். நீ பேசாமல் மியூச்சுவல் டைவர்ஸ் கொடுத்துவிடு’ என்று சொன்னார்” என்று தெரிவித்துள்ளார்.
