Connect with us

தொழில்நுட்பம்

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் புக் பண்ணப்போறீங்களா? புதிய விதி அமல்!

Published

on

IRCTC Vikalp

Loading

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் புக் பண்ணப்போறீங்களா? புதிய விதி அமல்!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) இணையதளம் மற்றும் மொபைல் ஆஃப் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் ரயில்வே அமைச்சகம் மேலும் ஒரு புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பதிவு முறையின் பலன்கள் உண்மையான பயணிகளைச் சென்றடைவதை உறுதி செய்வதையும், இடைத்தரகர்கள், பிற நேர்மையற்ற நபர்களால் இது தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி ரயில் டிக்கெட் முன்பதிவுகடந்த மாதம், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் அல்லது ஆஃப் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, பொது முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களில் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை இந்திய ரயில்வே கட்டாயமாக்கியது. இருப்பினும், ரயில்வேயின் கணினிமயமாக்கப்பட்ட PRS கவுண்டர்கள் மூலம் பொது முன்பதிவு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கபொது முன்பதிவு திறக்கும் முதல் 10 நிமிடங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முகவர்கள், முன்பதிவு தொடங்கும் நாளன்றான டிக்கெட் (opening day reserved tickets) முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற கட்டுப்பாட்டு நேரத்திலும் எந்த மாற்றமும் இல்லை என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.ரயில் டிக்கெட் முன்பதிவு: லேட்டஸ்ட் அப்டேட்சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, காலை நேரங்களில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை (Aadhaar-based authentication) ஐ.ஆர்.சி.டி.சி கட்டாயமாக்கியுள்ளது. இதுகுறித்து ஐஆர்சிடிசி வெளியிட்ட அறிக்கையில், அக்.28 முதல், முன்பதிவு தொடங்கும் முதல் நாளில், காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆதார் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ரயில்வே தட்கல் முன்பதிவு விதிகள் 2025இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் தட்கல் டிக்கெட்டுகள், ஆதார் மூலம் அங்கீகரிக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று தேசியப் போக்குவரத்துக் கழகம் (ரயில்வே) அறிவித்தது.முன்பதிவு தொடங்கும் முக்கியமான காலகட்டத்தில் மொத்தமாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே டிக்கெட் முகவர்கள், முன்பதிவு சாளரம் திறந்த முதல் 30 நிமிடங்களுக்கு, முன்பதிவு தொடங்கும் நாளன்றான தட்கல் டிக்கெட்டுகளை (opening-day Tatkal tickets) முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன