இலங்கை
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்த விவாதம் இன்று முதல் ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்த விவாதம் இன்று முதல் ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பான விவாதம் இன்று (08.11) ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பிக்கப்படும் விவாதம் வரும் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
2026 பட்ஜெட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.
குழு நிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடைபெறும்.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 05 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
2026 வரவு செலவு திட்ட விவாதம் பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர, ஒவ்வொரு நாளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை
