Connect with us

பொழுதுபோக்கு

7 டேக் போன இளையராஜா பாடல்; கடுப்பாகி பாட்டையே மாற்றிய பாக்யராஜ்: ஆபாச பாட்டுனு சொல்லி அசத்தலாக பாடிய இசைஞானி!

Published

on

Bhagyaraj Ilayaraja

Loading

7 டேக் போன இளையராஜா பாடல்; கடுப்பாகி பாட்டையே மாற்றிய பாக்யராஜ்: ஆபாச பாட்டுனு சொல்லி அசத்தலாக பாடிய இசைஞானி!

முந்தானை முடிச்சு திரைப்படத்தில், இடம் பெற்ற முதல் பாடல் மிகவும் செக்ஸியாக இருக்கிறது என்று கூறி பாட முடியாது என்று அடம் பிடித்த இளையராஜாவை அந்த பாடலை பாட வைத்த கே.பாக்ராஜ், கடைசியில், இளையராஜாவே அவர் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பாடி அசத்தியுள்ளார்.இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் பாக்யராஜ். இவர் பெரும்பாலும் தான் இயக்கிய படங்களில் தானே நாயகனாக நடித்துள்ளார். அந்த பாக்யராஜ் இயக்கி நாயகனாக நடித்து கடந்த 1983-ம் ஆண்டு வெளியான படம் முந்தானை முடிச்சு. ஊர்வசி, கோவை சரளா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார். கங்கை அமரன், முத்துலிங்கம், புலமைபித்தன் உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.ஏ.வி.எம். நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தின் கதையை சொல்வதற்காக ஏ.வி.எம்.நிறுவனம் சென்றிருந்த இயக்குனர் பாக்யராஜ், அங்கு சரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோரை சந்தித்து கதை கூறியுள்ளார். கதையை கேட்ட அவர்கள் ரொம்ப பிரமாதமாக இருக்கிறது என்ற சொல்லி, இந்த படத்திற்கு இளையராராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும். இது கிராமத்து கதை என்பதால், அவரை இசையமைக்க வைக்கலாம் என்று கூறியுள்ளனர்.அதன் காரணமாக முந்தானை முடிச்சு படத்தில் கங்கை அமரனை பாடல்கள் எழுத சொல்லிவிட்டு இளையராஜாவை இசையமைக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி படத்தின் பாடல் ரெக்கார்டிங் நடந்துள்ளது. இதில் முதல பாடலாக அருவிக்கரை ஓரத்திலே என்ற பாடலை இளையராஜா ஜானகி இருவரும் பாடியுள்ளனர். இந்த பாடல் திருப்தி இல்லாத பாக்யராஜ், என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்க, இந்த பாடல், 6-7 டேக்குகள் சென்றுகொண்டே இருக்கிறது. அப்போது பாக்யராஜூவுக்கு ஒரு யோசனை தோன்றி இந்த மெட்டுக்கு அவரே ஒரு பாடலை எழுதியுள்ளார். அந்த பாடல் தான் விளக்கு வச்ச நேரத்திலே என்ற பாடல். இந்த பாடலை முதலில் பார்த்த இளையராஜா இது மிகவும் செக்ஸியாக இருக்கிறது என்னால் பாட முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் ஜானகி இந்த பாடல் நன்றாக இருககிறது என்று சொல்லி பாட வேற வழி இல்லாமல் இளையராஜாவும் பாடியுள்ளார். பாடல் முடியும்போது, வார்த்தை மறந்த இளையராஜா விளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா என்று பாடி விட்டு மீண்டும் பாடலை ரீ டேக் கேட்டுள்ளார். ஆனால் பாக்யராஜ், இந்த பாட்டு செக்ஸியா இருக்குனு பாட மறுத்தீங்க, நீங்க சொன்ன தந்தானனா என்ற வார்த்தை அதைவிட செக்ஸியா இருக்கு என்ன மீனிங் வேனாலும் எடுத்துக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த பாட்டு இப்போதுவும் பெரிய ஹிட் பாடல் தான்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன